26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
2 onion bajji 1659786463
சிற்றுண்டி வகைகள்

வெங்காய பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 2 (வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.)

* கடலை மாவு – 1/2 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* ஓமம் – 1/4 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

Onion Bajji Recipe In Tamil
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெங்காய பஜ்ஜி தயார்.

Related posts

குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி?

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan

பருப்பு வடை,

nathan

கோதுமை காக்ரா

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

ஈஸி வெஜ் கட்லட்

nathan

இலந்தை பழ வடாகம்

nathan

கோதுமை மாவு சப்பாத்தி

nathan

பிரட் பஜ்ஜி

nathan