36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
சிற்றுண்டி வகைகள்

குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி?

குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி?

கோதுமையைவிட ஆறு மடங்கு அதிக நார்ச்சத்து குதிரைவாலியில் இருக்கிறது. இன்று குதிரைவாலி அரிசியில் எப்படி இடியாப்பம் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – அரை கிலோ,
உப்பு – ஒரு தேக்கரண்டி,
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் – கால் கப்,
நாட்டுச் சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி.

செய்முறை:

* குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் நீரை வடித்துவிட்டு நிழலில் ஆறவிட்டு மெஷினில் கொடுத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் எண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும்.

* இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம் தயார்.

* வெல்லம், தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.

Related posts

குனே

nathan

உருளைக்கிழங்கு பக்கோடா

nathan

மூங்தால் வெஜிடபிள் தோசை

nathan

பிரெட் க்ராப்

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை

nathan

குழந்தைகளுக்கான குளுகுளு சாக்லேட் புட்டிங்

nathan

ஸ்டீம்டு அண்ட் ஃப்ரைடு மணி பேக்

nathan

மசாலா இட்லி

nathan