25.1 C
Chennai
Tuesday, Dec 17, 2024
201606240938368928 how to make crispy potato vada SECVPF
சிற்றுண்டி வகைகள்

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்து தோலுரித்தது)
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – அரை கப்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.

* பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும். மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!!201606240938368928 how to make crispy potato vada SECVPF

Related posts

சத்தான கோதுமை ரவா தோசை

nathan

இறால் கட்லெட்

nathan

லசாக்னே

nathan

இட்லி

nathan

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

nathan

கொய்யா இனிப்பு வடை

nathan

சுவையான பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

nathan

சேமியா - கேரட் - பிரெட் ரோல்

nathan