31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

லசாக்னே

என்னென்ன தேவை?

லசாக்னே ஷீட் (பெரிய சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.) அல்லது மைதா சப்பாத்தி – 8 ( 2 கப் மைதாவில் 1 டீஸ்பூன் எண்ணெயும், உப்பும் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக செய்யவும்.
துருவிய மொசெல்லா சீஸ்- 1 கப்,
வேக வைத்த காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பிரக்கோலி) – 1 கப் (இந்தக் கலவையில் மிளகுத்தூள், உப்பு, தைம் மற்றும் ரோஸ்மெரி மசாலா சிறிது சேர்த்துக் கலந்து வைக்கவும்).
தக்காளி பியூரி – 2 கப்,
தக்காளி சாஸ் அல்லது கெட்ச்சப் – 2 டீஸ்பூன்,
ஒயிட் சாஸ் – சிறிது (2 டீஸ்பூன் வெண்ணெயை சூடாக்கவும். அதில் அரை கப் மைதா சேர்த்து கருகாமல் வறுக்கவும். 2 கப் பாலை சிறிது
சிறிதாக சேர்த்து பேஸ்ட் போலச் செய்யவும். கால் கப் சீஸ், சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் ஒயிட் சாஸ் ரெடி).

எப்படிச் செய்வது?

ஒரு பேக்கிங் டிரேயை எடுத்துக் கொள்ளவும். தக்காளி கெட்ச்சப்பை தக்காளி பியூரியுடன் கலந்து முதலில் டிரேயில் ஒரு லேயர் பரப்பவும். அதன் மேல் லசாக்னே ஷீட் அல்லது சப்பாத்தியால் மூடவும். அதில் காய்கறிக் கலவையை பரத்தவும். அதன் மேல் ஒரு லேயர் ஒயிட் சாஸ் ஊற்றவும். அதன் மேல் துருவிய சீஸ் ஒரு லேயர் போடவும். அதே போல இன்னொரு முறை செய்யவும். 180 டிகிரிக்கு 20 முதல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

Related posts

உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan

கொள்ளு சிமிலி உருண்டை

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

வாழைப்பழம் கோதுமை தோசை

nathan

ஜவ்வரிசி பக்கோடா

nathan

சொஜ்ஜி

nathan

நேந்திரம் பழம் அப்பம்

nathan