புதினா கீரையில் வைட்டமின் பி சத்து மிகுதியாக உள்ளது. வைட்டமின் பி சத்தினைப் பல வைகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
புதினாவில் எல்லாவகைச் சத்துக்களும் ஓரளவுக்கு இடம் பெற்றிருக்கின்றன. இதில் வைட்டமின் ஏ சத்தும் ஓரளவுக்கு அடங்கியிருக்கிறது. இது நல்ல ஜீரண சக்தியை அளிக்கக்கூடியது. சருமத்தின்பாதுகாப்பிற்கும் இதன் சத்து பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
புதினாக்கீரை – 1 கைப்பிடி
தக்காளிப் பழம் – 250 கிராம்
பீட்ரூட் 1 சிறியது
காரட் – 1 சிறியது
மைதா மாவு – 2 தேக்கரண்டி
இஞ்சி – ஒரு சிறு துண்டு
வெண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு, மிளகுத் தூள் – தேவைக்கேற்ப
பால் – 100 மி.லி.
தண்ணீர் – 500 மி.லி.
வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:
புதினா, தக்காளி, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வெண்ணெயை உருக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கவும். பீட்ரூட், காரட்டையும் ஒரு நிமிடம் வதக்கவும். மைதா மாவையும் உடன் சேர்த்து வதக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து, நீரிலிட்டு பாத்திரத்தை மூடி இருபது நிமிடங்கள் வரை வேகவைக்கவும். பிரஷர் குக்கரிலும் வேக வைக்கலாம். மேலே மிளகுத் தூள் தூவி இறக்கவும்.
மருத்துவ குணம் மிகுந்த சுவையான புதினா சூப் தயார். அனைவரும் புதினா சூப் செய்து பயன் பெறுவோம்.