28.9 C
Chennai
Monday, May 20, 2024
GOOSEBEERY
அறுசுவைஆரோக்கிய உணவுஆரோக்கியம்சூப் வகைகள்

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

அருமையான, எளிமையான, பக்க‍விளைவுகள் அல்லாத மருத்துவ பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் இருக்கும்போது கவலை உனக்கெதற்கு தோழமையே

உங்கள் குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் வலி ஏற்பட்டால் அந்த வலியினைப் போக்கும் வல்ல‍மை இந்த‌ வெற்றிலை நெல்லி ரசம்-த்தில் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தற்போது வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து என்ற செய்முறையையும் அதனைத் தொடர்ந்து அதனை உட்கொள்ளும்போது நமக்கு உண்டாகும் பிற பலன் களையும் பார்ப்போம்.

GOOSEBEERY

தேவையான_பொருட்கள்:

முழு நெல்லிக்காய் ( #Gooseberry ) – 10
வெற்றிலை ( #Betel ) – 20
கொத்தமல்லி இலை ( #Coriander ) – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 6 பல்
வால் மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.

பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.

அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடாமல் கீழே இறக்கவும்.

பயன்கள்

இந் நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.

எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிட த்தக்கது.

Related posts

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு! பிஸ்தாவின் மருத்துவ பலன்கள்

nathan

சுக்கு மல்லி காபி செய்முறை.

nathan

தர்பூசணியை விதையோடு சாப்பிடுபவரா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

பெட் சீட்டின் அடியில் சோப்பை வையுங்கள்: அற்புதம் இதோ!

nathan

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கவுனி அரிசி உருண்டை

nathan

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

nathan

கண்ணின் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி…!அப்ப இத படிங்க!

nathan

இந்த ஸ்மூத்திகளை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan