30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சூப் வகைகள்

சூப்பரான இறால் – காய்கறி சூப்

இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் – காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான இறால் – காய்கறி சூப்
தேவையான பொருட்கள் :

விருப்பமான காய்கறிகள் – 200 கிராம்
இறால் – 100 கிராம்
வெள்ளை வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு

செய்முறை :

* இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.

* கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

* வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.

* வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.

* இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள்.

* சத்து நிறைந்த இறால் – காய்கறி சூப் ரெடி.

Related posts

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan

வல்லாரை கீரை சூப்

nathan

சுவையான மீன் சூப் இவ்வாறு செய்து சாப்பிடுங்கள்…..

sangika

வாழைத்தண்டு சூப் செய்முறை

nathan

சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப்

nathan

சத்தான கேரட் இஞ்சி சூப் செய்முறை விளக்கம்

nathan

பசியை தூண்டும் சீரகம் – தனியா சூப்

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

வொண்டர் சூப்

nathan