30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சூப் வகைகள்

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

டயட்டில் உள்ளவர்களுக்கு ஓட்ஸ், ப்ரோக்கோலி சேர்த்து சத்தான சுவையான சூப் செய்யலாம். இந்த சூப்பை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

சத்தான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – அரை கப்,
ப்ரோக்கோலி – கால் கப்,
ஓமம் – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
பிரிஞ்சி இலை – ஒன்று,
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தட்டியது),
பால் – ஒரு கப்,
மல்லித்தூள் (தனியாத்தூள்),
மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, ப்ரோக்கோலிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, ஒரு கப் பால், ஓட்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

* பிறகு இஞ்சி, மிளகாயை நீக்கிவிட்டு (இல்லையென்றால் மிகவும் காரமாக இருக்கும்), கலவையை மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.

* வடிகட்டிய கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, ஓமம், தேவையெனில் பால் (அ) தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு கொதி விடவும்.

* பரிமாறுவதற்கு முன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் தூவவும்.

* சத்தான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப் ரெடி.

Related posts

மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம்.

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

மிக்ஸட் வெஜிடபுள் சூப்

nathan

ப்ரோக்கலி சூப்

nathan

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

nathan

கொண்டைக்கடலை சூப்

nathan

பட்டாணி சூப்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan