31.1 C
Chennai
Monday, May 20, 2024
y5ykXBy
சூப் வகைகள்

முருங்கைக்காய் சூப்

என்னென்ன தேவை?

முருங்கைக்காய் – 4
பூண்டு – 5 விழுதுகள்
சீரகம் – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 5 டீஸ்பூன்
மிளகு – சிறிது
கருவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
சிறிய வெங்காயம் – 8
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் முருங்கைக்காய்யை நீளமாக வெட்டி கொள்ளவும். அத்துடன் துவரம் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும். வேகவைத்த சாம்பார் பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.

இப்போது சாம்பார் பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு விழுதுகள், கருவேப்பிலை சேர்த்த பின் வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும். சுவையான முருங்கைக்காய் சூப் தயார்.y5ykXBy

Related posts

காளான் சூப்

nathan

வெஜிடேபிள் பாஸ்தா சூப்

nathan

மட்டன் கீமா சூப் செய்வது எப்படி

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்…

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

மிளகு ரசம்

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

தாய்லாந்து கோகனட் சூப்

nathan