24.3 C
Chennai
Thursday, Dec 19, 2024
Cooker story SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷர் குக்கரை எப்படி பயன்படுத்தவேண்டும்..

பிரஷர் குக்கர் சமைக்கும் போது 90 முதல் 95 சதவிகித ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் கிடைப்பதாக இத்தாலியின் ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அலுமினியம், காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் என பல வகையான உலோகங்களில் பிரஷர் குக்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பிரஷர் குக்கரை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

பயன்படுத்தும் முறைகள்
முதலில் பிரஷர் குக்கரை பயன்படுத்தும் கேஸ்கட் எனும் ரப்பர் வளையத்தை, பயன்படுத்தாதபோது குக்கரில் இருந்து கழற்றி, குளிர் சாதனப் பெட்டியின் பிரீஸரில் வைக்கலாம். இல்லையென்றால், பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கேஸ்கட்டைப் போட்டு வைக்கலாம்.

இதனால் கேஸ்கட் விரைவாக சேதம் அடைவதைத் தடுக்க முடியும். ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை கேஸ்கட்டை அவசியம் மாற்ற வேண்டும். பிரஷர் குக்கரின் மூடியில் இருக்கும் துவாரங்களில் ஏற்படும் அடைப்பை, சிறிய ஊசியின் உதவியால் நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அடுத்தாக, சமையல் முடிந்த பின்பு, குக்கரில் சமைத்த உணவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது.

மேலும், பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, அதில் பாதி அல்லது முக்கால் பாகம் தான் சமைக்கும் உணவுப்பொருள் இருக்க வேண்டும். முழு கொள்ளளவு வரை இருக்குமாறு சமைக்கக் கூடாது. குக்கரை மூடும் போதே ‘விசில்’ போடக்கூடாது. நீராவி நன்றாக வெளிவர ஆரம்பித்த பிறகே அதில் விசிலைப் பொருத்த வேண்டும்.

இதன் மூலம் குக்கர் சீராக இயங்குவதோடு நீண்ட நாள் உழைக்கும். முக்கியமாக பிரஷர் குக்கரில் நேரடியாக சமைப்பதைத் தவிர்த்து, உள்ளே ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே உடலுக்கு நல்லது.

சமைத்து முடித்ததும் குக்கரின் அழுத்தம் முற்றிலும் அடங்கிய பின்னர் தான் திறக்க வேண்டும். பிரஷர் குக்கரில் இருக்கும் கைப்பிடிகளில் உள்ள திருகுகள் துருபிடிக்காமல் இருப்பதற்கு அதனை மாதம் ஒரு முறை கழற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

திருகுகள் கழன்று வராமல் சரியாகப் பொருந்தி இருக்கிறதா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பிரஷர் குக்கரை அதன் காலாவதி தேதிக்கு பின்னரும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

Related posts

தளர்ந்து தொங்கும் மார்பகங்களைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்!

nathan

healthy tips, குழந்தையின் மலச்சிக்கலுக்கு உடனடி பலன் தரும் வைத்தியம்.

nathan

இப்படி இருக்குறவங்க கூட டேட்டிங் போகமா இருக்குறதுதான் நல்லதாம் தெரியுமா?

nathan

எலும்பின் வலிமையை அதிகரிக்க எளிய ஆரோக்கிய டிப்ஸ்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…புதிதாக பெற்றோரானவர்கள் குழந்தை பராமரிப்பில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

nathan

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

nathan

இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க… தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா?

nathan

தயங்க வேண்டாம் பெண்களே! உரக்கச் சொல்லுங்கள்!..உள்ளாடையின் முக்கியத்துவத்தை

nathan

பெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan