ஆரோக்கியம் குறிப்புகள்

தயங்க வேண்டாம் பெண்களே! உரக்கச் சொல்லுங்கள்!..உள்ளாடையின் முக்கியத்துவத்தை

பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். காலேஜ், அலுவலகம், பொது இடங்கள் என எங்கு சென்றாலும் பிறர் கண்ணுக்கு உறுத்தாத வகையிலும், அதேசமயம் தங்களையும் அழகாக காண்பிக்கும் ஆடைகளையே பெண்கள் அணிய விரும்புவர்.

இதனால் தினசரி எந்த உடை உடுத்துவது என்கிற எண்ணமே பல பெண்மணிகளுக்கு தலைவலியாய் மாறிப் போகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிற்கு தேவையானதை செய்துவிட்டு, அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்கிற பதற்றத்துடன் அந்த நாளைத் துவங்க வேண்டி இருக்கும். இதில் சமுதாயம் அவர்களுக்கு விதித்திருக்கும் ‘உடை கலாச்சார’த்துக்கும் முக்கியத்துவம் தரவேண்டிய சூழ்நிலை!

என்னதான் செய்வது???

எந்த வேலையில் ஈடுபட்டாலும், அதில் நம்மை சௌகரியமாக வைத்துக்கொள்வது முக்கியம். வீட்டு வேலை அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு முதலில் உடல் ரீதியாக எந்தவிதச் சிரமமும் இருக்கக் கூடாது. எனவே, உடை சௌகர்யம் பிரதானம். நாள் முழுவதும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட சொகுசான உடை உடுத்துதல் முதல்படி. குறிப்பாக பெண்களுக்கு, அவர்கள் அணியும் உள்ளாடைகள் மிகவும் சுத்தமாகவும், பொருந்தக்கூடிய வகையிலும் இருப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். உள்ளாடை கட்சிதமாக இருந்தால்தான், அடிக்கடி உடையை சரி பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற அனிச்சை எச்சரிக்கை உணர்வை விடுத்து பெண்கள் நிம்மதியாக செயல்படமுடியும்!
hgjhj
உள்ளாடைகளில் கவனம் தேவை…

சல்வார் கமீஸ், புடவை, ஜீன்ஸ்-டாப்ஸ் என எந்த உடையை அணிந்தாலும் அதற்கேற்ற சரியான உள்ளாடைகள் அணியவேண்டியது அவசியம். மாதவிடாய், கர்ப்ப காலம், புதிதாய் பிள்ளை பெற்ற தாய்மார்கள் – இப்படி ஒவ்வொருவருக்கும் ஏற்புடைய உடைகளையும், அந்த உடைகளுக்குத் தகுந்த உள்ளாடைகளையும் அணிவதே நல்லது. பெண்களின் ஆடை அணிதலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உள்ளாடைகள், சில சமயங்களில் பெண்களுக்கு எரிச்சலூட்டும். பெண் காவலர்கள், செவிலியர், செக்யூரிட்டி, கேபின் க்ரூ, போன்ற பணிகளில் பெரும்பாலும் சீருடை உடுத்த வேண்டி வரலாம், அதற்கேற்றபடி இறுக்கமானஉள்ளாடைகளையும் அணிந்துகொண்டு பணிபுரியும் பெண்மணிகளுக்கு, எப்போது ரிலாக்ஸ் ஆவோம் என்ற எண்ணம் இருப்பது சகஜமே.

இந்தச் சிக்கல்கள் குறித்து, சில பெண்களிடம் கேட்டபோது…

* சரியான கப் சைஸ் கொண்ட பிராக்களை அணிவதன் மூலம், சௌகரியத்தைப் பெறலாம்.

* 6-9 மாதங்களுக்கு ஒருமுறை உள்ளாடைகளை மாற்றுவதால் ஒவ்வாமை, தோல் நமைச்சல் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

* ஒவ்வொரு ஆடைக்கும், சீசனுக்கும் ஏற்றவாறு உள்ளாடைகளைக் கேட்டு வாங்கி அணிந்தாலே போதும், பல சிக்கலக்ளைத் தவிர்க்கலாம்…

இதுபோன்ற சில உபயோகமுள்ள குறிப்புகளை வழங்கினர்.

கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்நாளில் உள்ளாடைகள் குறித்தப் பல பிரச்னைகளைச் சந்தித்திருப்பீர்கள்! ‘இதுபோன்ற பிரச்னைகள் எனக்கும் ஏற்பட்டுள்ளது, அதனை நான் இவ்வாறு எதிர்கொண்டேன்’ என நீங்கள் மற்ற பெண்களுக்கு கூற விரும்பும் உள்ளாடை அணிதல் குறித்த குறிப்புகளை (Tips) வரவேற்கிறோம். உள்ளாடை வாங்குவது, பராமரிப்பு, உள்ளாடை போடும் முன் கடைப்பிடிக்கவேண்டியவை, தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்… இப்படி எதுவாக இருந்தாலும் உங்களின் மகள், சகோதரிகள் & தோழிகளுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் உள்ளாடைகள் குறித்த பயனுள்ள தகவல்களைத் தயக்கமின்றி கூறலாம். இந்த லிங்கிற்குச் சென்று, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன் உள்ளாடைகள் உடுத்தும் பெண்களுக்காக சிறப்பான ‘டிப்ஸ்’-களை எழுதி அனுப்புங்கள். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கபடும் சிறந்த குறிப்புகள், உங்களின் புகைப்படத்துடன் (நீங்கள் விரும்பும் பட்சத்தில்) விகடனின் Facebook/Twitter பக்கத்தில் வெளியிடப்படும்.

தன்னம்பிக்கையும், சௌகரியத்தையும் வழங்கும் உள்ளாடைகள் குறித்துப் பேச இனியும் தயங்க வேண்டாம் பெண்களே!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button