26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Husband wife relationship dispute solution
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள்.

ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.

எது எப்படியோ.. திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை உண்டாகாமல் இருந்தால்தான் தம்பதிகளில் யாருக்கேனும் பிரச்சனை இருக்கமுடியும் என்று நம்மால் சொல்லமுடியும். ஒவ்வொரு தம்பதிக்கும் அவரவர் சூழல் வேறுபடும். சிலர் முப்பது வயது போல திருமணம் முடித்திருக்கலாம்.

இவர்களுக்கு குழந்தை விஷயம் தள்ளிப்போனால் இரண்டு மூன்று வருடம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. இது உடனே கவனிக்கப்படவேண்டிய விஷயமாகிவிடும். சிலருக்கு இருபத்தியிரண்டு, இருபத்துமூன்று வயதிலேயே திருமணமாகலாம். ஆனால் குடும்பத்தாரின் நச்சரிப்பு இந்தத் தம்பதிக்கு அதிகமாக இருக்கும்.

வயது காரணமாக இவர்கள் இன்னும் சில காலம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றாலும், குடும்பக் கட்டாயத்தின் பேரில் அவர்கள் உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்துவிட நேரலாம். அதனால் சூழல் என்பது அவரவர்க்கு ஏற்றபடி மாறுபடும். அவரவருடைய குடும்பச்சூழல் மற்றும் தேவைப்படி மருத்துவர்கள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பார்கள்.

பொதுவாக டிரீட்மெண்டுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகளில், நூறு பேரில் எண்பத்தைந்து சதவீதம் பேர் வரை எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தாமலேயே கருதரித்து விடுவார்கள். மீதமுள்ளவர்களுக்குத்தான் மருத்துவர்களான எங்கள் உதவி முழுமையாகத் தேவைப்படும்.

தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.

எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?.

சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.

கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம். சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம்.

அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம்.

இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.
Husband wife relationship dispute solution

Related posts

இதயம் வேகமாக துடிப்பதால் பிரச்சனை ஏற்படுமா?

nathan

உடல் எடையை குறைக்கும் போது தலைவலியை போக்க 5 வழிகள்

nathan

கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் தேவையா?

nathan

உங்களுக்கு சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா காய்ச்சலுக்கான அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!

nathan

உங்களுக்கு சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?

nathan

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

nathan

நீங்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னும் பின்னும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?

nathan

உடலுறவு கொள்ளும் போது ஏன் வலிக்கிறது என்று தெரியுமா?

nathan