மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?

உலகில் மக்கள் அனைவரும் ஒருசேர மிகவும் வெறுக்கும் செயல் ஒன்றிருந்தால் அது கண்டிப்பாக இதுவாக தான் இருக்கும். முக்கியமாக சிறுவர்கள் குழந்தைகள் பெரியவர்களை வெறுப்பேற்ற இந்த செயலை செய்து மகிழ்வார்கள். உலக மக்களிடம் ஜாதி, மத, இன வேறுபாடின்று வெளிப்படும் உணர்வென்றும் இதை கூறலாம்.

நீங்களே கூறுங்கள்… கண்ணாடி பாட்டிலில் கத்தி அல்லது கூர்மையான இரும்பை வைத்து கீறினால், சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது? பீங்கான் தட்டில் போர்க் ஸ்பூன் கொண்டு கீச்சினால்? உங்களுக்கும் உடல் கூசும் உணர்வு வரும் தானே..?

கண்டிப்பாக அனைவரிடமும் இந்த உணர்வு தென்படும். சிலருக்கு கிச்சு, கிச்சு மூட்டினால் சிரிப்பு வராது, சிலரை எவ்வளவு பலமாக கிள்ளினாலும் வலிக்காது, சிலருக்கு கண்களில் கண்ணீர் வராது, சிலர் மனதில் ஈரம் சுரக்காது. ஆனால், இந்த ஒரு உணர்வு மட்டும் ஏன் அனைவரிடமும் பொதுவாக உண்டாகிறது?

என்றாவது நீங்கள் இதை யோசித்ததுண்டா?

ஆராய்ச்சி!

இப்படியான உணர்வு ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்துக் கொள்ள கடந்த 2011ல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் மனிதர்களின் காது குறித்து பல விஷயங்கள் ஆராயப்பட்டது. இதில் பல வயது சார்ந்த நபர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

இதில், இவர்களுக்கு பலவிதமான சப்தங்கள் இசைக்கப்பட்டு அதற்கு அவர்களது இதயத்துடிப்பு, சருமம், பஇரத்த அழுத்தம், மன நிலை எப்படி மாறுபடுகிறது என்றும் ஆராய்ந்தனர்.

பல்வேறு சப்தங்கள்!

மென்மையான சப்தங்கள் கேட்கும் போது இதயத்துடிப்பு சீராவதும், மனநிலை சாந்தமாக இருப்பதுமாக அமைவதும், பீட் சப்தங்கள் கேட்கும் போது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பதும், மனநிலை மேலோங்குவதுமாக அமைவதும் என ஒவ்வொரு இசைக்கும் உடலின் நிலை மாறுபடுவதை இந்த ஆய்வில் மிக தெளிவாக அறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

சோகம்!

சோகமான இசைகள் இசைத்த போது பலரும் மனமுருகி போயினர். சிலர் கண்ணீர் சிந்து அழவும் செய்தனர். உண்மையில் அவர்கள் வாழ்வில் அப்படி ஒரு சோகம் நிகழாத போதிலும், திடீரென இசையில் நிகழ்ந்த ஒரு மாற்றம் அவர்களது உடல் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறிய முடிந்தது.

இப்படியாக தான் சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வும் உண்டாகிறது என ஆய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

மனரீதியாக!

உடல் ரீதியாக மட்டும் இசை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிவிட முடியாது. இசையின் தாக்கம் முதலில் மனதில் தான் எழுகிறது. அதுவே உடலில் கலந்து சோகம், மகிழ்ச்சி, கோபம், அழுகை என பல உணர்சிகள் வெளிவர காரணியாக அமைகிறது.

 

நான்கு செயல்கள்!

பாட்டிலில் கத்தியை வைத்து கீறுவது
கிளாஸ் அல்லது பீங்கான் பொருட்களில் போர்க் ஸ்பூன் வைத்து சுரண்டுதல்
கரும்பலகையில் சாக் கொண்டு அழுத்தமாக கிறுக்குதல்
இரும்பு ஸ்கேலை வைத்து பாட்டில்களில் தேய்ப்பது
என இந்த நான்கு செயல்கள் நகங்களை காட்டிலும் உடலில் கூச்ச உணர்வை அதிகமாக ஏற்படுத்துகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பலவகை இசை!

சாதாரன இசை மட்டுமின்றி, பெண்கள் கத்துவது, குழந்தையின் அழுகை, சிரிப்பு, இடி சப்தம், மழைத்தூறல், ப்ரேக், டிரில்லிங் சவுண்ட், மாவாட்டும் சப்தம், தொழிற்சாலை சப்தங்கள் என பலவகை சப்தங்கள் மற்றும் இசையை ப்ளே செய்து இந்த ஆய்வை நடத்தினர் ஆய்வாளர்கள்.

அமிக்டாலா (Amygdala)

அமிக்டாலா என்பது நமது உணர்வுகளை கட்டுப்படுத்தும் மூளையில் இருக்கும் பகுதி. இது காண பாதாம் போன்ற அமைப்பில் இருக்கும். இது உணர்சிகளை கட்டுப்படுத்துதல் மட்டுமில்லாது, நினைவுகள் மற்றும் ஒரு முடிவை எடுக்க உதவுவது என பல வேலைகளை செய்கிறது.

இனிமையின்மை!

நீங்கள் இனிமையில்லாத சப்தம் ஏதாவது கேட்கும் போது, அது இந்த அமிக்டாலா பகுதியில் தாக்கத்தை உண்டாக்கும். உடனே அங்கிருந்து ஒரு சார்ஜ் ஸ்பார்க் உண்டாகும். இது மூலமாக உங்கள் உடலில் சில உணர்ச்சி சார்ந்த மாற்றங்கள் ஏற்படும்.

பொதுவாக 120 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் / இசை கேட்க துவங்கினாலே நமது காதுகளில் வலி ஏற்பட ஆரம்பித்துவிடும். தொடர்ந்து நீங்கள் 85 டெசிபலுக்கு மேல் ஏதேனும் சப்தம் அல்லது இசையை கேட்டுக் கொண்டே இருந்தால் காது கேட்கும் திறம் மெல்ல, மெல்ல குறைய துவங்கும்.

ஹெட்செட், இயர்போன்!

இன்று நாம் மிகவும் வேகமான உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பேருந்து, பைக், கார் எதில் சென்றாலும் ஹெட்செட் அணிந்துக் கொண்டு பாடல் கேட்க வேண்டும். கணினி முன் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தாலும் மூளை சோர்வடையாமல் இருக்க பாடலின் துணை தேவைப்படுகிறது.

அதுவும், பக்கத்தில் இருப்பவர் என்ன பேசுகிறார், நம்மை அழைக்கிறாரா? என்பதை கூட கேட்க முடியாத அளவுக்கு சப்தத்தை அதிகரித்து வைத்துக் கொண்டு தான் பாடல் கேட்கிறோம்.

செவித்திறன்!

இதனால் அமெரிக்காவில் மட்டுமே ஐந்துக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் காது கேளும் திறனை இழந்துள்ளனர். எனவே, தான் ரொம்ப நேரம் ஹெட்செட் உபயோகப்படுத்த வேண்டாம், அதிக சப்தம் வைத்து இசையை ரசிக்க வேண்டாம் என பல ஈ.என்.டி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button