தேவையான பொருட்கள்:
* பன்னீர் – 300 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
காளான் குருமாகாளான் குருமா
* தக்காளி – 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சுவையான… முட்டைக்கோஸ் சட்னிசுவையான… முட்டைக்கோஸ் சட்னி
* கறிவேப்பிலை – சிறிது
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு…
* வரமிளகாய் – 5-6
* மல்லி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* கிராம்பு – 3
* பட்டை – 1
* மிளகு – 1 டீஸ்பூன்
* கசகசா – 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சிறிது ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, அதை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பன்னீர் செட்டிநாடு தயார்.