ginger puli thokku
அறுசுவைஊறுகாய் வகைகள்

சுவையான இஞ்சி புளி தொக்கு!

தேவையானப்பொருட்கள்:

இஞ்சி – 50 கிராம்,
புளி – நெல்லிக்காய் அளவு,
வெல்லம் – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 3,
கடுகு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

ginger puli thokku

செய்முறை:

இஞ்சியைக் கழுவி, தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக்கவும். புளியை ஊற வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் புளி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் தாளித்து… அரைத்த விழுது, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுக்கவும்.

Related posts

மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா

nathan

டின் மீன் கறி

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

பட்டாணி பொரியல்

nathan

கருப்பட்டி வட்டிலப்பம்/ Jaggery Wattalappam recipe in tamil

nathan

nathan

அரிசி மாவில் காய்கறிரொட்டி செய்முறை…..

sangika

ஐயங்கார் புளியோதரை

nathan