28.7 C
Chennai
Tuesday, Nov 5, 2024
wlzuv23822
இனிப்பு வகைகள்

தேன் மிட்டாய்

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 4 கப்
முழு உளுந்து – ஒரு கப்
சீனி – 4 கப்
தண்ணீர் – ஒரு கப்
ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர்
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
1.அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.
2.அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். (இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது)
3.அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
4.ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.
5.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும். உருண்டைகள் பொரிந்து மேலே வரும்.
6.பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.
7.ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.
8.சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.

TIP
உருண்டைகளை சீனிப் பாகில் போடுகையில் பாகு மிதமான சூட்டுடன் இருக்க வேண்டும். ஒரு வேளை பாகு ஆறி விட்டால் உருண்டைகளை போடும் முன் மிதமான தீயில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.
wlzuv23822

Related posts

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

சுரைக்காய் இனிப்பு போளி

nathan

சுவையான பாதாம் லட்டு

nathan

தீபாவளி இனிப்பு ஸக்கார் பரே – செய்முறை !

nathan

குலாப் ஜாமுன் Gulab Jamun using Milk Powder

nathan

சுவையான இனிப்பு போளி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

வேர்க்கடலை உருண்டை

nathan

ரசகுல்லா செய்முறை!

nathan