32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
201610011427302430 milk rava kesari SECVPF
இனிப்பு வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான பால் ரவா கேசரி

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், பால் மற்றும் ரவையைக் கொண்டு கேசரி செய்து கொடுங்கள்.

குழந்தைகளுக்கு விருப்பமான பால் ரவா கேசரி
தேவையான பொருட்கள்:

ரவை – 1/2 கப்
சர்க்கரை – 3/4 கப்
பால் – 2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
குங்குமப்பூ – சிறிது
முந்திரி – 10 உலர்
திராட்சை – 10

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே வாணலியில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* பின் அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

* ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கைவிடாமல் கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், பால் ரவா கேசரி ரெடி!!!201610011427302430 milk rava kesari SECVPF

Related posts

பப்பாளி கேசரி

nathan

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி

nathan

சுவையான ரவா லட்டு!…

sangika

இனிப்பு விரும்பிகளுக்கு பாணிக் கடும்பு (pudding)

nathan

தீபாவளி ஸ்பெஷல் லட்டு

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா

nathan

ஊட்டி ஹோம் மேட் சாக்லேட் :

nathan

கேரட் பாயாசம்

nathan