தற்போது உடல் எடையை குறைக்க ஓட்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். அப்படி காலை வேளையில் ஓட்ஸ் செய்ய நினைக்கும் போது, ஓட்ஸ் ரெசிபியின் சுவையானது அருமையாக இருக்க வேண்டுமானால், அதனுடன் பழங்கள், நட்ஸ் மற்றும் பால் சேர்த்து சமையுங்கள்.
இதனால் ஓட்ஸானது சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இங்கு பழங்கள், பால், நட்ஸ் சேர்த்து செய்யக்கூடிய ஓட்ஸ் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
ஸ்ட்ராபெர்ரி – 4-5 பழங்கள் (துண்டுகளாக்கப்பட்டது)
ஆப்பிள் – 1 (நறுக்கியது)
வாழைப்பழம் – 1 (நறுக்கியது)
பாதாம் – 1 கையளவு
வால்நட்ஸ் – 3-4 (விருப்பப்பட்டால்)
உலர் திராட்சை – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
பால் – 1 கப்
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பாலில் உள்ள சர்க்கரையானது கரைந்ததும், அதில் ஓட்ஸ் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து கிளறி இறக்கி, அதன் மேல் பாதாம், வால்நட்ஸ் மற்றும் உலர் திராட்சை தூவி சாப்பிட வேண்டும்.