36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நாட்டு மருந்து குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிட்டு வரலாம்.

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு
தேவையான பொருட்கள் :

வெள்ளை கடுகு – 1 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
வரமிளகாய் – தேவையான அளவு
பரங்கி செக்கை – ஒரு நெல்லிக்காய் அளவு
சுக்கு – சிறிதளவு
பூண்டு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளிக்கரைசல் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – சிறிதளவு
வெந்தயத்தூள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறிது தண்ணீர் சேர்த்து புளியை கரைத்து கொள்ளவும்.

* வெள்ளை கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், பரங்கி செக்கை(நசுக்கியது), சுக்கு, பூண்டு இவை அனைத்தையும் நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

* பின் அதில் கரைத்த புளி கரைசல், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிவும் போது சிறிதளவு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

* நல்ல சுவையுடன் கூடிய வாய்வு தொல்லைய நீக்கக்கூடிய குழம்பு ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பூண்டை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் உங்களை நெருங்கவே நெருங்காது!!

nathan

இதய நோய் வராமல் தவிர்க்க எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

ஆரோக்கிய டிப்ஸ்

nathan

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

nathan

முளைக்கட்டி சாப்பிடுங்கள் !சமைத்து சாப்பிட வேண்டாம் ! நோய்கள் அண்டாது !

nathan

சூப்பர் டிப்ஸ்! கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவு முறைகள்..!

nathan

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிட வேண்டும்?

nathan

1 to 3 month pregnancy diet chart in tamil – 1 முதல் 3 மாத கர்ப்பகால உணவு திட்டம்

nathan

மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை

nathan