ஆரோக்கிய உணவு

உடல் நலத்தை காக்கும் பனை மரம்!!!

நாம் மறந்த பல பாரம்பரிய விஷயங்களில் பனை மரமும் ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மாநில மரம் என்னும் பெருமைக் கொண்ட பனை மரத்தை நாம் இந்நாளில் காண்பதே அரிதாக உள்ளது. இந்த தலைமுறையினர் கிராமப்புறங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்களில் மட்டுமே காண முடிகின்ற அளவில் தான் நமது நாட்டில் பனை மரங்கள் இருக்கின்றன. பனை மரத்தை பற்றி அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் உணவு பொருள்கள் நமக்கு நிறைய ஆரோக்கியமான நலன்களை தருகிறது என்பதையாவது நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.

 

நுங்கு,பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. வருடம் முழுக்க வெயிலில் காயும் பனை மரம். நாம் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலில் காயும் போது நம் தாகத்தையும், உடல் சூட்டையும் தணிக்க வெகுவாக உதவுகிறது. பல இரசாயனங்கள் கலந்த உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கண்ட குளிர் பானங்களை குடிப்பதற்கு பதிலாக இந்த இயற்கை உணவை உண்டு ஆரோக்கியம் அடையுங்கள். சரி, இனி பனை மரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களின் மூலம் நாம் அடையும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

நுங்கு

நுங்கு, உடல் நல ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தின் சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நுங்கு நல்ல பயன் தருகிறது. நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை பெரும் அளவில் அளிக்கிறது நுங்கு.

சத்துகள்

நுங்கில் அதிகஅளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கிறது.

கொழுப்பை குறைக்கும்

நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பயன் பெற முடியும்.

மலச்சிக்கல், வயிற்றுபோக்கு

நுங்கில் உள்ள நீர் சத்தானது, வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இவ்விரண்டிற்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

உடல் சூடு

எவ்வளவு நீர் பருகினாலும் உடல் சூடு குறையவில்லை என்பவர்கள் நுங்கை சாப்பிடுவது அவசியம். நுங்கு உடல் சூட்டை தணிக்கும் மற்றும் தாகத்தை போக்கும்.

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள் நுங்கை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை குறையும்.

மார்பக புற்று நோயை தடுக்கும்

நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.

அம்மை நோயை தடுக்கும்

வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

மற்றவை

பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என பனை மரத்தில் இருந்து உருவாக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களுமே அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button