இந்த சம்பவம் நிறைய பேரின் வீடுகளில் நடந்திருக்கும். அம்மாவோ, மனைவியோ, சகோதரியோ தோசை சுடும்போது தோசைக்கல்லில் ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகுது,
அதனால் இட்லி வைச்சிருக்க என்றோ ஏங்க நீங்க ஓட்டல்ல தோசை வாங்கிட்டு வந்திருங்க என்று சொல்வார்கள்.
அதுபோன்ற நேரங்களில் தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் இதனை சரி செய்ய சிறிது புளியை வெள்ளைத்துணி ஒன்றில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு தொட்டு தோசைக் கல்லில் தேய்த்துவிட்டு, அதன் பிறகு தோசை வார்த்தால், தோசை, தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான தோசை தயார்.