25.7 C
Chennai
Saturday, Dec 14, 2024
weight loss f
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! உடல் எடை குறையணுமா? அப்ப உடனே இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

தற்போது நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் பல புதுமையான உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நாவை அடக்குவது என்பது சற்று கடினம் தான். அதிலும் நீங்கள் உணவுப் பிரியராக இருந்தால், நாவைக் கட்டுப்படுத்தவே முடியாது. இன்றைய காலத்தில் பலர் உடல் பருமனால் அவஸ்தைப்படுவதற்கு உணவுகளும், வாழ்க்கை முறையும் காரணங்களாக உள்ளன.

அதுவும் தற்போது பலரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உடலுக்கு போதிய வேலை கிடைக்கப் பெறாமல், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் ஆங்காங்கே தங்கிவிடுகின்றன. இதன் விளைவாக பலரும் உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்சனையால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

மேலும் பல புதுமையான நொறுக்குத்தீனிகளும் ஒருவரது உடல் பருமனுக்கும், தொப்பைக்கும் முக்கிய காரணங்களாகின்றன. இந்த உணவுகளைத் தவிர்த்து, தினமும் உடற்பயிற்சியைத் தவறாமல் மேற்கொண்டால், நிச்சயம் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்கலாம்.

இப்போது தொப்பை மற்றும் உடல் பருமன் குறைய உடனே தவிர்க்க வேண்டிய உணவுகள் எவையென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே தவிர்த்து உடலை சிக்கென்று வைத்துக் கொள்ளுங்கள்.

பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்தமான ஒரு காய்கறி. இந்த காயைக் கொண்டு பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் உருளைக்கிழங்கைக் கொண்டு புதுமையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்நாக்ஸ் தான் பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ். இது முற்றிலும் எண்ணெயில் பொரிக்கப்படுவதால், கொழுப்புக்கள் அதிகம் நிறைந்திருக்கும். இதை ஒருவர் அதிகளவில் உட்கொண்டு வந்தால், உடல் பருமனால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முதலில் தவிர்க்க வேண்டிய ஒரு உணவுப் பொருள் பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகும்.weight loss f

சர்க்கரை கலந்த மற்றும் கார்போனேட்டட் பானங்கள்

எந்த ஒரு பானத்தில் சர்க்கரை கலந்தாலும், அந்த பானம் ஆரோக்கியமற்ற பானம் தான். சர்க்கரை ஒருவரது உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் பொருள். எனவே உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், அதைக் சர்க்கரை கலந்த பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். அதோடு, கார்போனேட்டட் பானங்களையும் தொடக்கூடாது.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீமில் சர்க்கரை அதிகளவில் உள்ளது. மேலும் இது ஒருவரது உடல் எடையை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருளும் கூட. ஒருவேளை உங்களுக்கு ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுந்தால், வீட்டிலேயே ஐஸ் க்ரீம் தயாரித்து சாப்பிடுங்கள். அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பிட்சா

தற்போது சமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு பலரும் ஆர்டர் செய்து சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக பிட்சா உள்ளது. கடைகளில் தயாரித்து விற்கப்படும் பிட்சா மிகவும் சுத்திகரிக்கப்பட்டவை மற்றும் அதில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளன. எனவே இவற்றை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

ஆனால் வீட்டிலேயே பிட்சாவை உருவாக்க முடியும் என்றிருக்க, ஏன் கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டும்? வீட்டில் தயாரிக்கும் பிட்சா ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடியவையாக இருப்பதால், இப்படிப்பட்ட பிட்சா ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

காபி

காபியில் ப்ளாக் காபி ஒரு ஆரோக்கியமான தேர்வு. மற்ற வகை காபி பானங்களில் செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை ஆரோக்கியமற்றவை மற்றும் கொழுப்பு நிறைந்தவை.

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட் முற்றிலும் மைதாவால் ஆனது. இந்த பிரட்டை அதிகமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும். பசி அதிகம் இருந்தால், வெள்ளை பிரட்டை சாப்பிடுவதற்கு பதிலாக, வேறு ஏதேனும் சிறப்பான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

க்ரனோலா பார்கள்

இந்த வகை பார்கள் மிகவும் ஆரோக்கியமற்றவை. ஏனெனில் இதில் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் எண்ணெய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு, அதில் கலோரிகளும் அதிகளவில் உள்ளது. இவற்றைக் கொண்டு வயிற்றை நிரப்பப் பார்ப்பது நல்லதல்ல. ஒருவேளை ஸ்நாக்ஸ் வேளையில் ஏதேனும் சாப்பிட நினைத்தால், பழங்கள் அல்லது நட்ஸ்களை சாப்பிடலாம்.7 bars 15

ஜூஸ்

தற்போது மார்கெட்டில் பல புதுமையான ஜூஸ்கள் விற்கப்படுகின்றன. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதோடு, சர்க்கரை ஏராளமாக உள்ளது. அத்துடன் அந்த வகை ஜூஸ்களில் நார்ச்சத்து ஏதும் இல்லை. எனவே இந்த வகை ஜூஸ்களை குடிப்பதற்கு பதிலாக, பழங்களை உண்பதே நல்லது.

கேக், மிட்டாய், குக்கி

இந்த வகைகளில் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் எண்ணெயுடன், க்ரீம் உள்ளது. இவைகளில் சத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால் கலோரிகள் அதிகமாக உள்ளது. இதை ஒருவர் அதிகம் சாப்பிட்டால், அது ஒருவரது உடல் பருமனுக்கு தான் வழிவகுக்கும்.

மது

மது அருந்தாமல் இருக்கும் ஆண்களைப் பார்ப்பது அரிது. ஆனால் உங்கள் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க நினைத்தால், மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். குறிப்பாக பீர் குடிக்கக்கூடாது. இது தொப்பையின் அளவைத் தான் மேலும் பெரிதாக்கும்.

Related posts

`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’… முட்டை குறித்த சந்தேகங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடால் போதும்!

nathan

தெரிந்துகொள்வோமா? கொரோனா பாதித்தவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது!

nathan

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைத்து அழகை உயர்த்தும் உன்னத வழிமுறைகள்!!!

nathan

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது?

nathan

சூப்பரான தக்காளி மிளகு காரச்சட்னி செய்முறை

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்..

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

அவதானம்! உயிருக்கு உலை வைக்கும் பப்பாளி!

nathan