36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கிய உணவு

சூப்பரான தக்காளி மிளகு காரச்சட்னி செய்முறை

செம சுவை… இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி மிளகு காரசட்னி. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: தக்காளி – 5 (பெரியது), காய்ந்த மிளகாய் – 4, மிளகு – 1 தேக்கரண்டி, வெந்தயம் – 3/4 தேக்கரண்டி, பெருங்காயம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – 2 குழிக்கரண்டி, கடுகு, உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும். அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துவிடவும்.

(மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

அடுப்பை அணைத்து வைத்து வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும். சுவையான மிளகு கார சட்னி தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பலவிதமான‌ உடல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ‘தேன்’ நெல்லிக்காய்!

nathan

ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

எந்த உணவுப் பொருளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லதுன்னு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்

nathan

உடல் எடையினால் அவதிப்படுகிறீர்களா?

nathan

உங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?

nathan

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

nathan

சுவையான மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி ??

nathan

தினமும் காலையில் சூடான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடல் எடை குறையுமா?

nathan