தேவையான பொருட்கள் :
சாதம் வடித்த கஞ்சி – 1 கப்
புளித்த மோர் – கால் கப்
இஞ்சி – 1 துண்டு (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நீள்வாக்கில் நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை கொட்டி வதக்கிக்கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் சாதம் வடித்த கஞ்சி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வந்ததும் இறக்கி அதனுடன் மோரை சேர்த்து, கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.
சூப்பரான சாதம் கஞ்சி சூப் ரெடி.
Courtesy: MalaiMalar