26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
21 6194e
ஆரோக்கிய உணவு

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு என்றாலே இன்று நகரத்தில் இருப்பவர்களுக்கு எச்சில் தான் கொட்டும். ஆம் அந்த அளவிற்கு அசைவ பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு சமைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு 200 கிராம்
கத்தரிக்காய் 1/4 கிலோ
முருங்கைக்காய் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 2
புளி 1 எலுமிச்சை அளவு
வெந்தயம் அரை ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு
சின்னவெங்காயம் 1 கையளவு
மல்லி தூள் 50 கிராம்
சீரகம் அரை ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
வரமிளாய் 2
கறிவேப்பிலை சிறிது
பூண்டு 4 பற்கள்
துருவிய தேங்காய் 1/4 கப்
இவை அனைத்தையும் மண்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்த பின்பு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை
முதலில் கருவாட்டை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும்.
கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் வெட்டிவைத்துக்கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றியதும் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கயும்.
காய்கள் நன்றாக வதங்கியதும் அதில் உள்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்தது நன் கொதிக்க விடவும்.
பின்பு கரைத்து வைத்த புளிகரைசலை தேவையான புளிப்புக்கு ஏற்ப சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். அவ்வளவு தான் நாவூறும் சுவையில் அசத்தலாக கருவாட்டு குழம்பு தயார்.

Related posts

டயட் அடை : ஈஸி 2 குக் ! ஹெல்த்தி டைம்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…அசிங்கமா தொங்கும் பானை வயிறு ஒரே நாளில் மாயமாகனுமா? வெந்நீரில் இந்த சக்திவாய்ந்த பொருளை கலந்து வெறும் வயிற்றில் குடிங்க!

nathan

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

sangika

தெரிந்துகொள்வோமா? வாழ்நாளை குறி வைக்கும் குளிர் பானங்கள்!

nathan

சுவையான சிம்பிளான… தேங்காய் சாதம்

nathan

சத்துமாவு கொழுக்கட்டை

nathan

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?அப்ப இத படிங்க!

nathan

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும்

nathan