36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சத்துமாவு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: சத்துமாவு (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்) – ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், வெல்லத் துருவல் – ஒரு கப்.
செய்முறை:

* வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

* வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

* மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், சத்து மாவு சேர்த்துக் கிளறி, வெந்ததும் எடுக்கவும்.

* கையில் நெய் தடவிக் கொண்டு, இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடி விரல்களால் அழுத்தி கொழுக்கட்டையாக பிடிக்கவும்.

* நெய் தடவிய இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான் சத்துமாவு கொழுக்கட்டை ரெடி.

Related posts

மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்

nathan

சத்து பானம்

nathan

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க சிறுநீரகங்களை பாதுகாக்க இந்த 7 உணவுகள் போதுமாம்..!

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

சூப்பரான பிரெட் பீட்சா

nathan

உங்களுக்கு தெரியுமா உணவை கையால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

மாப்பிள்ளை சம்பா அரிசி தீமைகள்

nathan

இந்த ஒரே ஒரு இலை நீரிழிவு நோயை நெருங்க கூட விடாது?தெரிஞ்சிக்கங்க…

nathan