26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Other News

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்

நடிகை ஐஸ்வர்யா ராயை புண்படுத்தும் வகையில் பேசியதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்தில் பேசிய ரசாக், “நேற்று கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகம் குறித்து விவாதித்தோம், அங்கு தற்செயலாக ஐஸ்வர்யா ராயின் பெயரை குறிப்பிட்டேன். தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நான் நினைக்கவில்லை.

முன்னதாக பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் ரஸாக் பேசும்போது, “பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் இதனை சிரித்து கைதட்டி ரசித்தனர்.

அப்துல் ரசாக்கின் மோசமான கருத்துக்காக நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடியுள்ளனர். இது ஒரு மோசமான உதாரணம் என்று ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் அப்துல் ரசாக் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

Related posts

Inside Zayn Malik’s Private World: Going Solo, Becoming Single and Still Working

nathan

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை -இங்கிலாந்தில்

nathan

அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்!வீடியோ

nathan

டிஐஜி பெயரில் போலி Facebook ID

nathan

காதலி ரியாவின் சகோதரன் திடுக்கிடும் வாக்குமூலம்! சுஷாந்துக்கு போதைப்பொருள்:

nathan

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்

nathan

8 மாத கர்ப்பமாக இருந்த பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..

nathan

வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்: சின்மயி விவகாரத்தில்

nathan

40 வயதை நெருங்கும் டிடியா இது? குத்தாட்டம் போட்ட காட்சி!

nathan