27.8 C
Chennai
Saturday, Oct 19, 2024
s5 11 1452513809
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க வீட்டு குழந்தைகள் அடிக்கடி சண்டை போடறாங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் வீடு கலகலப்பாக உற்சாகமாக தான் இருக்கும். ஆனால் அவர்களே ஒருவருக்கொருவர் அடித்து சண்டை போட்டு கொண்டு அழுது கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கும்? குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தை வளத்துக்கொண்டால் பிற்காலத்திலும் இதே கோபம் நிலைக்க வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளின் சண்டைகளை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

1. இருவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்

நீங்கள் இளைய பிள்ளை வந்த உடன் இளைய பிள்ளையை மட்டுமே அதிகமாக கவனித்துக்கொண்டு இருப்பீர்கள். அது உங்கள் மூத்த பிள்ளைக்கு வருத்தத்தை தரலாம். எனவே இரு பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிடுங்கள். மூத்த குழந்தை ஒரளவு வளர்ந்திருந்தால், அந்த குழந்தைக்கு என சில வேலைகள் இருக்கும். எனவே இளைய பிள்ளை அளவுக்கு நேரம் செலவிட வேண்டி வராது. ஆனாலும் குறிப்பிட்ட நேரத்தை மூத்த பிள்ளைக்காக செலவிடுவது நல்லது.

2. ஒப்பிட்டு பேச வேண்டாம்

ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் விளையாட்டாக கூட ஒப்பிட்டு பேச வேண்டாம். இது ஒருவர் மீது ஒருவருக்கு கோபத்தை உண்டாக்கும்.

3. பாசத்தை அதிகப்படுத்துங்கள்

உங்களது இரு பிள்ளைகளுக்கு இடையே உள்ள பாசத்தை அதிகப்படுத்த வேண்டியது உங்களது கடமையாகும். எனவே உன் மீது அக்கா / அண்ணன் நிறைய பாசம் வைத்து இருக்கிறான். உன்னை நன்றாக பார்த்துக்கொள்வான். நீ எதுவானாலும் அவனிடம் கேள் என்பது போன்ற வார்த்தைகளை கூறி இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்க வேண்டியது உங்களது கடமை.

4. சரிசமமாக செய்யுங்கள்

உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் இருவருக்கும் எது செய்தாலும் சரிசமமாக செய்வது அவசியம். ஒருவருக்கு குறைவாகவும், ஒருவருக்கு அதிகமாகவும் செய்வது நீங்களே அவர்களுக்குள் சண்டையை உண்டாக்குவது போன்றதாகும்.

5. இன்னும் சண்டை போடுகிறார்களா?

இதை எல்லாம் செய்தும் கூட இன்னும் சண்டை போடுகிறார்கள் என்றால், கட்டாயம் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும். அது என்னவென்று தெரிந்து அதை சரி செய்ய தவறாதீர்கள்.

குழந்தைகளை ஒப்பிட்டு பேசுதல், ஒருவரை அதிகமாகவும் மற்றொருவரை குறைவாகவும் பார்ப்பது ஆகியவை பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் ஆகும். ஒரு ஆரோக்கியமான மனநிலையுடன் குழந்தை வளர இவற்றை எல்லாம் செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் திறமையை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆகியவை தான் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஆகும்.

Related posts

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை போக்கும் உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்!

nathan

ஆண்களே அப்பா ஆகப்போறீங்களா?… அதுக்கு முன்னாடியே இத தெரிஞ்சி வெச்சிக்கோங்க…

nathan

கொழுப்பு அளவு… ஆண்களும் பெண்களும்

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

ஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்!

nathan

தாய்ப்பால் குழந்தைகள் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை கிடுகிடுனு குறைக்கும் கருப்பு உருண்டை!

nathan

உங்க ராசிப்படி எப்படிப்பட்டவங்கள நீங்கள் காதலிக்கக்கூடாது தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan