32.2 C
Chennai
Monday, May 20, 2024
03 1435909336 bittergourd curry
சைவம்

பாகற்காய் புளிக்குழம்பு

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சத்தான காய்கறியாகும். இதற்கு அதில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக இருக்கலாம். இருப்பினும் இதனை பொரியல் செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் பொரியல் செய்தால் கசப்புத்தன்மை அப்படியே தெரியும். ஆனால் அதனை புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி பாகற்காயை வதக்கி பின் குழம்பு செய்தால், அதன் கசப்புத்தன்மை தெரியாது. சரி இப்போது பாகற்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.


03 1435909336 bittergourd curry

பாகற்காய் – 1 (வட்டமாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 1/4 கப்
தக்காளி – 1 (அரைத்தது)
புளி – 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்ழுன்
மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
வெந்தயப் பொடி – 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து வதக்கி, பின் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து, அதில் புளிச்சாறு ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் வதக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், பாகற்காய் புளிக்குழம்பு ரெடி!!!

Related posts

சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

nathan

காளான் மஞ்சூரியன்

nathan

வாழைக்காய் சிப்ஸ்

nathan

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு….

nathan

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

கோவைக்காய் அவியல்

nathan

பருப்பு சாதம்

nathan

வரகு குடைமிளகாய் சாதம்

nathan