பெரும்பாலான பகுதியில் மழை பெய்து வருகின்றது. இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது நம் வீட்டிலும் வெளியிலும் மின் கசிவை எவ்வாறு தவிர்த்து, பாதுகாப்புடன் இருப்பது என்பது.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இடி இடிக்கும்போது மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.
இடி இடிக்கும்போது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம்.
மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகேயும் செல்லக் கூடாது.
அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியின் அருகில் செல்லக் கூடாது.
இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும்.
குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது.
இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இடம் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.
டிவி, மிக்ஸி, கிரைண்டர், தொலைப்பேசி போன்றவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.