36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ எளிய நிவாரணம்

சரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை முறையே சிறந்தது என்று பல பெண்கள் கருதுகின்றனர்.

இதில் வெள்ளரிக்காய், உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க மிக சிறந்த தீர்வாக அமையும்.

வெள்ளரிக்காய் மற்றும் அத்துடன் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் முகத்தில் தோன்றும் கருமை மற்றும் கருந்திட்டுக்களை எளிதில் அகற்றலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சாறு

ஒரு முழு உருளைகிழங்கின் சாறு மற்றும் அரை வெள்ளரிக்காயின் சாறை எடுத்து இரண்டையும் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

ஒரு காட்டன் பஞ்சு எடுத்து அந்த கலவையில் நனைத்து முகத்தில் தேயுங்கள். சிறிது நேரம் காய விட்டு பின்னர் கழுவுங்கள்.

வெள்ளரிக்காய் மற்றும் பால் பவுடர்

 

பால் பவுடர் மற்றும் வெள்ளரி சாறு சேர்த்து பேஸ்ட் போன்று கலவை உருவாக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். பேஸ்ட் காய்ந்ததும் சருமத்தை மெதுவாக மசாஜ் செய்து கொண்டே வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

தேவையானால் இதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைகருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகள்

சிறிது புதினா இலைகள் மற்றும் சில வெள்ளரிக்காய் துண்டுகளை மிக்ஸியில் இட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்யை முகத்தில் மாஸ்க்காக போட்டு அரை மணி நேரம் விட்டு, பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பளபளக்கும். வாரத்தில் நான்கு முறை இதைச் செய்யலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை

முதலில் இரண்டு தேக்கரண்டியளவு வெள்ளரிக்காய்ச் சாறு இரண்டு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு தேக்கரண்டியளவு தயிர் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவுங்கள்.

அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் கழுவுங்கள். இதனை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் தயிர்

ஒரு மிக்ஸியில் வெள்ளரி, கற்றாழை மற்றும் ஓட்ஸ் கலந்து அரைத்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அரை மணி நேரம் விட்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவுங்கள். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

வெள்ளரிக்காய் மற்றும் கடலை மாவு

வெள்ளரிக்காய் சாறு மற்றும் கடலை மாவு சம அளவு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.

அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கழுவும் முன்பு மசாஜ் செய்து விட்டு கழுவுவது நல்லது. இந்த முறையை நீங்கள் ஒரு நாள் விட்டு மறுநாள் என்று பின்பற்றலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் தேன்

வெள்ளரிக்காய்ச் சாறை தேனுடன் கலந்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, அரை மணி நேரம் விட்டுவிடுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

Related posts

வினிகரில் ஊற வைத்த வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

வெந்நீர் வெறும் வயிற்றில் குடித்தால் என்ன ஆகும்?

nathan

உங்க ராசிப்படி உங்க கணவன் அல்லது மனைவி உங்களுக்கு துரோகம் பண்ணுனா அவங்கள என்ன பண்ணுவீங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

நாள்பட்ட நெஞ்சு சளி, மூக்கடைப்பு அனைத்திற்கும் ஒரே தீர்வு!!சூப்பர் டிப்ஸ்!

nathan

சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில கை வைத்தியங்கள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க வேண்டுமா? சோறு வடித்த கஞ்சி மட்டும் போதுமே!

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! தங்க நாணயங்கள் வாங்கும் போது மறக்கக்கூடாதவை

nathan

தெரிஞ்சுக்கோங்க இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… படுக்கையறையில்

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியமுடியும்…

nathan