chipesss01
அறுசுவைகார வகைகள்

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

தேவையான பொருட்கள்: 
* உருளைக்கிழங்கு – 3
* வெங்காயம் – 2
* கொத்தமல்லி – சிறிதளவு
* கேரட் – 1/2 கப் (துருவியது)
* சீஸ் – 1/2 கப் (துருவியது)
* கார்ன் – தேவைக்கேற்ப
* மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
* கரம் மசாலா – 1 தேக்கரண்டி
* கார்ன்ஃப்ளார் – தேவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு
* உப்பு – தேவைக்கேற்ப
* ப்ரெட் தூள் – தேவைக்கேற்ப

chipesss01

செய்முறை:
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

* கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.

* இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

* உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

* டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

Related posts

மைதா வெனிலா கேக்

sangika

பிரியாணி மசாலா மீன் வறுவல்

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

கத்திரிக்காய் ஊறுகாய்

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

தீபாவளி பலகாரமான தட்டை செய்வது எவ்வாறு??

nathan

இறால் பஜ்ஜி

nathan