30.7 C
Chennai
Saturday, Aug 29, 2026
அறுசுவைசைவம்

தந்தூரி மஷ்ரூம்

8_tandoori_mushroomsஎன்னென்ன தேவை?

மஷ்ரூம் – 1 கப்,
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்,
லோ ஃபேட் பால் – 1/4 கப்,
லோஃபேட் தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
கசூரி மேத்தி – 1 டேபிள்ஸ்பூன்,  உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க…

காய்ந்த மிளகாய் – 4,
பூண்டு – 4 பல்,
இஞ்சி – ஒரு பெரிய துண்டு,
மல்லித் தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
சீரகத் தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப. (அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்).


எப்படிச் செய்வது?

பாலில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து வைக்கவும். மஷ்ரூமை முழுதாக சுடுநீரில் போட்டு, ஒரு கொதிவிட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். நான் ஸ்டிக்  கடாயில் அரைத்த விழுதை சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். கசூரி மேத்தி, மஷ்ரூம், கார்ன்ஃப்ளார் கரைத்த பால், தயிர், உப்புச் சேர்த்து நன்கு  கிளறவும். சூடாக சப்பாத்தி அல்லது புல்காவுடன் பரிமாறவும். மஷ்ரூமுக்கு பதில் காலிஃப்ளவரிலும் இதைச் செய்யலாம்.

Related posts

சுவையான சீஸ் ஆலு பன்ச் ரெடி..

sangika

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan

சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான காலிஃப்ளவர் பட்டாணி குழம்பு ……

sangika

சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை

nathan

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan

கத்தரிக்காய் பொரியல் கறி

nathan

உளுந்து வடை செய்வது எப்படி

nathan