36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சுவையான காளான் தக்காளி ரொட்டி

இதுவரை காளான் தக்காளி ரொட்டியை செய்து சாப்பிட்டதுண்டா? அப்படியெனில் இங்கு அந்த ரொட்டி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சுவையான மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

அதிலும் இது காலையில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். சரி, இப்போது அந்த காளான் தக்காளி ரொட்டி ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Mushroom Tomato Roti Recipe For Breakfast
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்

காளான் – 200 கிராம்

தக்காளி – 2 (அரைத்தது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 சிட்டிகை

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் அரைத்த தக்காளியை விட்டு, சிறிது கொதிக்க விட்டு, பின் காளானை சேர்த்து காளான் நன்கு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் உப்பு சேர்த்து, கரம் மசாலாவை தூவி கிளறி இறக்கி விட வேண்டும்.

பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொன்றாக தேய்த்து, அதன் நடுவே காளான் கலவையை வைத்து மடக்கி, மீண்டும் லேசாக தேய்த்து, அதனை தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான காளான் தக்காளி ரொட்டி ரெடி!!!

Related posts

இதோ அற்புத மாற்றம்தரும் தர்பூசணி விதையை கொதிக்க வைத்து 3 நாட்கள் குடியுங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவு முறைகள்..!

nathan

தயிர் நெல்லிக்காய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

ஏலக்காய் – தேங்காய்ப் பால்

nathan

இன்சுலின் சுரப்பை அதிகரிக்க பூசணி விதையை சாப்பிடுங்க..!சூப்பர் டிப்ஸ்

nathan

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு!

nathan

பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

இஞ்சியை தோல் நீக்க ரொம்ப சிரமப்படுறீங்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan