27 C
Chennai
Thursday, Nov 14, 2024
aloevera
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க…

அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலர் பல்வேறு அழகுப் பராமரிப்புக்களை பின்பற்றுவார்கள். அதிலும் பண்டிகை காலங்கள் வந்தால், பண்டிகையின் போது அழகாக காணப்பட வேண்டுமென்று, தினமும் பல பொருட்கள் கொண்டு சருமத்தைப் பராமரித்து வருவார்கள். அப்படி பணம் செலவழிக்காமல் சருமத்தை அழகாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் கற்றாழை. மேலும் இந்த கற்றாழையானது அனைத்துவிதமான சருமத்தினருக்கும் மிகவும் நல்லது.

அதுமட்டுமின்றி, இந்த கற்றாழை ஃபேஸ் பேக்கை அன்றாடம் போட்டு வந்தால், சருமத்தின் பொலிவு நிச்சயம் அதிகரிக்கும். சரி இப்போது சரும பிரச்சனைக்கு கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.

சரும கருமையைப் போக்க…

சருமத்தில் உள்ள கருமையைப் போக்க கற்றாழை ஜெல்லில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.

கரும்புள்ளிகளைப் போக்க…

முகத்தில் ஆங்காங்கு புள்ளிகள் காணப்பட்டால், அதனைப் போக்க கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிது நேரம் மசாஜ் செய்து நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மற்றும் பருக்களால் வந்த வடுக்கள் நீக்கிவிடும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு…

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து 20 நிமிடம் நன்கு ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறையாவது தவறாமல் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சென்சிடிவ் சருமத்திற்கு…

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வெளியேறுவதுடன், சரும அரிப்புக்கள் ஏற்படாமல் இருக்கும்.

வறட்சியான சருமத்திற்கு…

வறட்சியான சருமத்தினர் கற்றாழை ஜெல்லில், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் செய்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.

புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற…

இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். அதற்கு கற்றாழை ஜெல்லில் சிறிது மாம்பழக் கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இறந்த செல்களை நீக்க…

பளிச்சென்ற மென்மையான முகத்தைப் பெற கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

Related posts

உங்கள் கழுத்து கருத்துள்ள‍தா? : இதோ சூப்பர் டிப்ஸ்…!

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

முகப்பருவிற்கு நல்ல தீர்வை வழங்கும் யுனானி மருத்துவம் !….

sangika

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!

nathan

சாதாரண காயிற்கு இப்படிபட்ட மகத்துவங்கள் எல்லாம் நிறைந்துள்ளன!…

sangika

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

உங்க முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கிறதா?

nathan

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

nathan

சரும வகைகளும்… அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகளும்…

nathan