முகப் பராமரிப்பு

பெண்களே சீக்கிரம் வெள்ளையாகணுமா? கருப்பா இருக்கீங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

உங்கள் முகம் பொலிவிழந்து கருமையாக அசிங்கமாக காட்சியளிக்கிறதா? நீங்கள் சீக்கிரம் வெள்ளையாக விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் சருமத்திற்கு தவறாமல் பராமரிப்புக்களைக் கொடுத்து வாருங்கள். அதிலும் உங்களுக்கு இருப்பது வறட்சியான சருமமா? அப்படியானால் இந்த வகை சருமத்தினர் மற்ற சருமத்தினரை விட சற்று ஸ்பெஷலாக தங்களின் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள், சரும வறட்சியைத் தடுக்க சருமத்தில் ஈரப்பசையைத் தக்க வைக்கும் பொருட்களைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால், சரும வறட்சி அதிகரித்து, பின் அதிக வறட்சியால் சரும வெடிப்புகள், சரும அரிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் வறட்சியான சருமத்தைக் கொண்டிருந்து, சீக்கிரம் வெள்ளையாக நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில ஃபேஸ் மாஸ்க்குகளை அடிக்கடிப் போடுங்கள். இதனால் விரைவில் வெள்ளையாவீர்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வாழைப்பழ ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு, ஒரு கனிந்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி ஃபேஸ் பேக்

நீங்கள் அடிக்கடி பப்பாளி வாங்கி சாப்பிடுவீர்களா? அப்படியானால் அதைக் கொண்டும் ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு சிறிது பப்பாளியை நக் மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

பீச் ஃபேஸ் பேக்

பப்பாளியைப் போன்றே பீச் பழமும் சரும நிறத்தின் அழகை அதிகரிக்க உதவக்கூடியது. அதற்கு பீச் பழத்தை வெட்டி, அதன் ஒரு துண்டை முகத்தில் மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் ஈரத்துணியால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி, சரும நிறமும் அதிகரிக்கும்.

அவகேடோ ஃபேஸ் பேக்

அவகேடோ பழம் வறண்ட சருமத்தினருக்கு ஏற்ற அற்புதமான ஒரு பழம். அவகேடோ பழத்தை மென்மையாக மசித்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின் அதைத் தொடர்ந்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கோதுமை மாவு பேக்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து, தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். இதனால் சரும வறட்சி நீங்கி, சருமமும் சீக்கிரம் வெள்ளையாகும்.

தேன் ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 1 2/3 டேபிள் ஸ்பூன் தேன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது கோதுமை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அதன் பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமம் மென்மையாக பட்டுப் போன்று பொலிவோடு இருக்கும்.

வெங்காய ஃபேஸ் பேக்

பொதுவாக வெங்காயத்தின் மணம் மிகவும் மோசமானதாக இருக்கும். ஆனால் அந்த வெங்காயச் சாறு சரும சுருக்கத்தைத் தடுக்கும் என்பது தெரியுமா? சிறிது வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் சில துளிகள் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button