அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சருமத்தை மாசில் இருந்து பாதுகாக்க சிறந்த வழிகள்!…..

சுற்றுச்சூழல் மாசு, சருமத்தில் சுரக்கும் ஒருவகை புரதமான கொலாஜன் சுரப்பதை குறைக்கிறது. மேலும், அதிகப்படியான நிறமி, வயதாவதற்கு முந்தைய சுருக்கங்கள், வறட்சி, எக்ஸீமா நோய் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது. காற்றில் உள்ள மாசுக்கள், நமது டிஎன் ஏவை பாதிக்கக்கூடிய தீங்கான பொருளை உருவாக்குகிறது. இது, நம் சருமத்தை மெல்லியதாகவும், வறட்சியானதாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல், புற்றுநோய் உண்டாவதற்கும் வழிவகுக்கிறது. சிகரெட் புகை போன்ற மாசுக்கள், திசுக்களுக்கு அடியில் ரத்த ஓட்டத்தை பாதித்து, சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

காற்றில் உள்ள மாசு, சருமத்தின் மேற்பரப்பில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த மாசு பொருள், சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகளைவிட சிறிதாக இருப்பதால், அந்த துளைகளுக்குள்ளேயே சென்றுவிடும். சருமத்தை மாசில் இருந்து பாதுகாக்க, சருமத்தை நன்றாக பராமரிப்பது மட்டுமல்லாமல், அதனை தினமும் பின்பற்ற வேண்டும்.

face

1. தூய்மைப்படுத்துதல்:

ஹமாம் போன்ற பாதுகாப்பான சோப்பை பயன்படுத்தி சருமத்தை சுத்தப்படுத்துவதன் மூலம், சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் சருமத்தின் துளைகளில் படிந்திருக்கும் மாசுக்களில் இருந்து விடுதலை பெறலாம். வேம்பு, கற்றாலை மற்றும் துளசி போன்ற பொருட்கள், சருமத்தை பாதுகாப்பாகவும் ஈரத்தன்மையுடனும் வைக்கிறது. பாதுகாப்பான சோப்புகளை பயன்படுத்தி, நம் உடலில் படிந்திருக்கும் மாசுக்களை தினமும் கழுவி விடுவது மிகவும் நல்லது.

2. ஈரப்படுத்துதல்:

தூய்மைப்படுத்துவதை தொடர்ந்து, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பது மிகவும் அவசியமானது. சருமத்தை மிருதுவாக வைக்க, ஈரப்பதம் நிறைந்த சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒரு நல்ல மாய்ஸ்சரைசர், சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, சருமத்தின் திசுக்களை வழவழப்பாகவும் கொலாஜன் சுரக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஏ உள்ள மாய்ஸ்சரைசர், சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும். வைட்டமின் சி கொண்ட சீரம், மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை காக்கிறது.

3. ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் பயன்படுத்துதல்:

சருமத்தில் தடவப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அல்லது உணவில் எடுத்துக்கொள்ளும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், சருமத்திற்கு தீங்கு தரும் பொருட்களின் செயல்பாட்டை தடுக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஈ, சருமத்திற்கு பயன்படுத்தக்கூடிய மிக சிறப்பான ஆண்டிஆக்ஸிடண்டுகள் ஆகும். ஆரஞ்சு, கீரை வகைகள், பாதாம் போன்ற காய்கறி மற்றும் பழங்கள் சரும பராமரிப்புக்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது. உங்கள் தினசரி உணவில், வைட்டமின் சி சத்து போதுமான அளவு கிடைக்கவில்லை எனில், தினமும் மல்டிவிட்டமின் எடுத்துக்கொள்ளலாம்.

4. பாதுகாத்தல்:

தினமும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். ஏனெனில், சூரியனின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. வெயில் அதிகமான இருக்கும்போது வெளியே செல்ல நேர்ந்தால், முடிந்த அளவு துணியாலோ அல்லது தொப்பிகளாலோ முகத்தை மூடிக்கொள்ளலாம்.

5. சிகிச்சை அளித்தல்:

வாரத்திற்கு ஒரு முறை முகத்தில் மாஸ்க் போடுவது காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒரு சிகிச்சை போன்று அமையும். பப்பாளி, வேம்பு, கற்றாழை, தேன் போன்ற பொருட்களால் வீட்டிலேயே செய்யப்படும் மாஸ்க், ஒரு காலத்தில் இழந்த ஈரப்பதத்தை மீண்டும் பெற உதவும்.

6. புகைப்பிடித்தலை நிறுத்துதல்:

சிகரெட் புகை, சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது; இது, சருமத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது. இன்றே பழக்கத்தை விட்டு வெளியேற இது ஒரு நினைவூட்டல்!

7. நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்:

சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதே சிறந்த வழி. தண்னீர் அதிகமாக எடுத்துக்கொள்வதும் க்ரீன் டீ எடுத்துக்கொள்வதும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சதையின் நெகிழும் தன்மையை அதிகரிக்கும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால், மாசுபாட்டால் ஏற்படும் தீங்குகளை எதிர்க்க முடியும். வயதாவது இயற்கையான நிகழ்வு. ஆனால் சில வழிகளை நாம் பின்பற்றினால், சிறுவயதிலேயே வயதான தோற்றம் அடைவதை தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button