36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொந்தரவு தரக்கூடிய பிரச்சனை என்று சொன்னால், அது முகப்பரு தான். அதிலும் அந்த முகப்பரு வெடித்து, அதிலிருந்து வெளிவரும் ஒரு நீர்மம் மற்ற இடங்களில் படிந்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும்.

மேலும் முகத்தில் பருக்களானது வந்துவிட்டால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும்.

நிறைய மக்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கடைகளில் விற்கப்படும் இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவற்கு பதிலாக இயற்கை வழிகளை பயன்படுத்தி எவ்வாறு விரட்டுவது என்பதை பார்ப்போம்.

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கும்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் சிறிது சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவ வேண்டும்.

தர்பூசணி:

தர்பூசணியில் நீர்ச்சத்துடன், வைட்டமின்களில் சி, ஏ மற்றும் டி அதிகம் உள்றளது. எனவே இதனை அரைத்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, பருக்களையும் மறைக்கும்.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழத்தைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது ஆரஞ்சு பழத் தோலை பொடி செய்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

பப்பாளி:

பப்பாளி பழத்தை அரைத்து, அதில் பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடலாம். இதனால்ல் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

செர்ரி:

செர்ரிப் பழத்ரை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தக்காளி:

தினமும் தக்காளியை அரைத்து அதனை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், பருக்கள் போய்விடும்.

ப்ளம்ஸ்:

ப்ளம்ஸை பால் சேர்த்து அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

சிவப்பு திராட்சை:

சிவப்பு திராட்சையை தயிர் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பருக்களை எளிதில் மறையச் செய்யலாம்.

Related posts

கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

Useful tips.. சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் துளசி!

nathan

வீட்டிலேயே ஃபேஸ் பேக் பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம்

nathan

முகத்தில் சுருக்கங்களை போக்கி மிளிரச் செய்யும் க்ரீன் டீ !!

nathan

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்?

nathan

சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க.

nathan

இவ்வளவு நன்மைகளா! சந்தனப் பேஸ் பெக் முகப்பொலிவை அதிகரிக்கும்

nathan

அரிசி கழுவிய நீரானது அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல பிரச்சனைகளை தடுக்கக் கூடிய சக்தியும் அத்தண்ணீருக்கு உள்ளது.

nathan

இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க.. முகம் ஜொலிக்க இழந்த பொலிவை திரும்ப பெறலாம்….

nathan