35.1 C
Chennai
Saturday, May 24, 2025
625.0.560.350.160.300.053.800 1
ஆரோக்கிய உணவு

கவலை வேண்டாம்! வறட்டு இருமல் நிக்காமல் வருதா?இந்த ஒரே ஒரு பொருள் போதும்

பொதுவாக பருவ மாற்றத்தால் சளி, காய்ச்சல் உருவாகி நம்மை பாடாய் படுத்தும்.

அதில் வறட்டு இருமல் வந்து விட்டால் போதும் சிலருக்கு இருமி இருமியே தொண்டை, வயிறு மற்றும் மார்புப் பகுதிகள் வலிக்க ஆரம்பித்து விடும்.

இதற்காக அடிக்கடி மருந்துகளை போடுவதை தவிர்த்து இருமலை உடனே குணப்படுத்த நீங்கள் துளசி இலைச்சாற்றை எடுத்து வரலாம்.

ஏனெனில் துளசியில் ஏகப்பட்ட பாரம்பரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளது.

துளசி இலைகள் நுண்ணுயிர் தொற்று நோய் களுக்கு சிகச்சை அளிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கரிப்பதற்கும், இருமல் போன்ற பிரச்சனைகளை களையவும் உதவுகிறது.

ஆனால் துளசி இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு தேநீர் எந்த நேரத்திலும் ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் பிற நுரையீரல் நோய்களை நீக்க பயன்படுகிறது.

அந்தவகையில் வறட்டு இருமலை போக்க கூடிய ஓர் அற்புத பானம் ஒன்றினை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
துளசி இலை – 5-7
ஏலக்காய்
இஞ்சி
கருப்பு மிளகு
தேன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் 5-7 துளசி இலைகளை போட வேண்டும். 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடுங்கள்.

இப்பொழுது பாத்திரத்தை மூடி துளசி இலைகளை அப்படியே விட்டு விடுங்கள்.

அடுப்பை அணைத்து விட்டு டீ ஆறியதும் அதை வடிகட்டி வெதுவெதுப்பாக அந்த நீரை குடிக்கவும். வறட்டு இருமல் காணாமல் போய் விடும்.

ஏலக்காய், இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் தேன் சேர்த்து சளிக்கு பயன்படுத்துங்கள். இதை தினமும் குடித்து வரும் போது இருமலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதிய துளசி இலைகளை தேனுடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். இதுவும் உங்க வறண்ட இருமலை குணப்படுத்த உதவி செய்யும்.

Related posts

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

nathan

சுவையான கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கிரீன் டீ குடிக்கலாமா..?

nathan

உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் சாப்பிட்டா ஒரே மாசத்துல ஹைட்டாகலாம்!!

nathan

உங்க உணவில் தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் ஆலு சப்பாத்தி

nathan

கொலஸ்டிராலை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

nathan

இரும்புச்சத்து நிறைந்த வல்லாரை!

nathan

உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்க எளிதான வழி என்ன?

nathan