28.8 C
Chennai
Friday, Jul 26, 2024
625.500.560.350.160.300.053 7
ஆரோக்கிய உணவு

சுவையான சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி?

சீனாவில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுகு முன்பு தான் இந்த நூடுல்ஸ் இருந்தது. அதன் பின்னர் சீனாவில் சிங்ஹாய் மாகாணத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்தியர்களால் அதிகளவில் ருசித்து சாப்பிடும் உணவாகவும் மாறிவிட்டது இந்த நூடுல்ஸ்.

அந்தவகையில், வெரைட்டிகள் இருந்தாலும், இந்த பதிவில் ருசியான சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் – 1 பாக்கெட்

கோஸ் – 1/2 கப்

கேரட் – 2

குடை மிளகாய் – 1/2 கப் சிவப்பு

குடை மிளகாய் – 1/2 கப் பச்சை

வெங்காயம் – 1

ஸ்ப்ரிங் ஆனியன் – ஒரு கையளவு

சோயா சாஸ் – 2 மேஜைக்கரண்டி

வினிகர் – 2 மேஜைக்கரண்டி

கிரீன் சில்லிசாஸ் – 1 மேஜைக்கரண்டி

ரெட் சில்லி சாஸ் – 1 மேஜைக்கரண்டி

பூண்டு – 2 பல்

பச்சை மிளகாய் – 2

மிளகு தூள் – 1 மேஜைக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை.:

வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.

நூடுல்ஸ் 80 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம்.)

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.

சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.

அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை நன்கு கலக்குமாறு பிரட்டி போடவும்.

நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி நூடுல்ஸ் தயார்.

Related posts

சூப்பரான பசலைக்கீரை தோசை ரெசிபி

nathan

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ் ! காலை உணவாக தானியம் : நோய்களுக்கு வைப்போமே சூனியம்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சீரகத் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மையா..?

nathan

பிரிட்ஜில் எந்தெந்த உணவு பொருட்களை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் சிறிது துளசி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள்…!!

nathan

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

கருப்பை நீர்க்கட்டியால குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan