f91333da91766500e1d5629e1e
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!!

தேவையான பொருட்கள்:
ஆவாரம்பூ – 200 கிராம்,
சுக்கு – 2 துண்டு,
ஏலக்காய் – 3
உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்,
சோம்பு – 2 டீஸ்பூன்
செய்முறை:
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையான போது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்:
சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து.

சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
ஆவாரம் பூ கஷாயத்தை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.
வெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்கு சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும். இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.

Related posts

தயிர் தினமும் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்குமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள் !!

nathan

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

nathan

ஆரோக்கியமாக உண்ணுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள்!!!

nathan

உலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க… சூப்பர் டிப்ஸ்

nathan

பால் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்: மிஸ் பண்ணிடாதீங்க!!

nathan

சத்தான ஸ்நாக்ஸ்

nathan

ஆரோக்கியத்தை பேண உருளைக்கிழங்கு!

nathan

உண்மை என்ன ?உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

nathan