ஆரோக்கிய உணவு

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன.

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலி
முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காய்கறியான ப்ரோக்கோலி அதிகமான சத்துள்ளது. புற்றுநோய்க்கும் இது தடை போடும் என்கிறார்கள் ஆய்வார்கள்.

ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது.

ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான். ப்ரோக்கோலியில் உள்ள தாதுப்பொருட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைச் சீராகவும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை பராமரிக்க உதவுகின்றன.

ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை கைகொடுக்கின்றன. ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.201606210925154770 Broccoli may reduce cholesterol in the body SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button