ஆரோக்கிய உணவு

செரிமாணத்தை ஏற்படுத்தும் இஞ்சி சாதம்

இஞ்சி செரிமாணத்தை தூண்டும். இஞ்சி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செரிமாணத்தை ஏற்படுத்தும் இஞ்சி சாதம்
தேவையான பொருட்கள் :

இஞ்சி – இரண்டு துண்டு,
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
வடித்த சாதம் – இரண்டு கப்

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி, துருவியோ (அ) விழுதாய் அரைத்தும் பயன்படுத்தலாம்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் அரைத்து இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.

* நன்றாக வதக்கியதும் இரண்டு கப் வடித்த சாதத்தை போட்டு கிளறி இறங்கி பரிமாறலாம்.

* இதனை பிரிஞ்சி சாதம் போல் பாசுமதி அரிசியில் குக்கரிலும் செய்து உண்ணலாம்.201608120831327391 how to make ginger rice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button