வழக்கமாக ஏப்ரல், மே மாதங்கள் கோடைக்காலம் என குறிப்பிடப்படுகிறது. ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரு சில உணவு வகைகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டியது அவசியம்.
எந்தெந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்?
உப்பு, புளிப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
மசாலா பொருட்களான மிளகு, பட்டை, இலவங்கம் போன்ற பொருட்கள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் செய்த பலகாரங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே, கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும்.
வெயில் காலத்தில் கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
பயிறு, ராகி, அதிக மைதா உணவுகள், எள்ளு, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே, இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.
கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே, இதனை தவிர்ப்பதே நலம்.
உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே, இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.
வெயில் காலத்தில் குளிர்ச்சியான குளிர்பானங்களை அருந்துவது வழக்கம். இந்த குளிர்பானங்களில் உள்ள சில பொருட்கள் உடலில் உள்ள தண்ணீரை சிறுநீர் மூலம் அதிகளவில் வெளியேற்றிவிடும். எனவே, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.