30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
tttt
ஆரோக்கியம் குறிப்புகள்

இறுதி மாதவிடாய் காலகட்டத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

உங்கள் உணவில் போதிய கால்சியம் உள்ளதா என்று கவனியுங்கள். ஒரு நாளைக்கு ஒரு பெண் 1200 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கால்சியம் கொத்தமல்லி, முடக்காத்தான், பசலை கீரை, பிரண்டை, பால், நன்னீர் மீன், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் அதிக அளவு உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துவதோடு, இறுதி மாதவிடாய் காலகட்டத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

இரும்பு சத்து உங்கள் உடலில் இரத்த போக்கு அதிகம் ஏற்படும் போது, ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். அதிக இரும்பு சத்து பேரீச்சம்பழம், பச்சை கீரை வகைகள், கொட்டை வகைகள், தானியங்கள், இறைச்சி, தேன் போன்றவற்றில் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் அளவு இரும்பு சத்தை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் (women) தினமும் 21 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி, இறுதி மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் சில உபாதைகளை தடுக்க உதவும். வாழைக்காய், வாழைத்தண்டு, பீன்ஸ், வாழைப்பூ, முளைகட்டிய பயிர், அரிசி, அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய், பிரண்டை, புதினா, கொத்தமல்லி, மற்றும் கீரை வகைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
tttt
முடிந்த வரை போதிய தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் இவ்வளவு நீர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு தாகம் எடுகின்றதோ அப்போதெல்லாம், தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் நீர்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

உடல் சீராக வேலை செய்யவும், எலும்புகள் தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும், கொழுப்பு சத்து தேவை. எனினும், அது நல்ல கொழுப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் தேங்காய், கொட்டை வகைகள் போன்ற பாதுகாப்பான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை சிவப்பு இறைச்சியை தவிர்த்து விடுவது நல்லது.

உங்கள் உடலில் கால்சியம் சார வைட்டமின் டி சத்து மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது. எனினும், இது அதிக அளவு சூரிய கதிர்களில் மட்டுமே உள்ளது. மேலும் இந்த சத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினமும் இளம் கதிர் விழும் நேரத்தில் சூரிய ஒளியில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டும். குறிப்பாக வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து சூரிய கதிரில் நின்று அதன் பின் எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்து கிடைத்து விடும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆக்கத்திறன் கொண்டவர்கள் பின்பற்றும் 9 வெற்றி ரகசியங்கள்!!!

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

மெலிந்த உடல் பருக்க

nathan

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…

nathan

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! வயிற்று எரிச்சலை போக்க சில ஈஸி டிப்ஸ்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில டிப்ஸ்…

nathan

விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலைமை என்ன ? தெரிந்துகொள்வோமா?

nathan

ஏன் சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும்? சுத்தத்தை கற்றுக்கொடுத்த கொரோனா:

nathan