உடற்பயிற்சி என்பது ஜிம்மிற்குச் சென்று, அதிக எடையுள்ள கருவிகளுடன் உடற்பயிற்சி செய்வது என்று நீங்கள் நினைத்தால், அதனை மறுபரிசீலனை செய்யுங்கள். யோகாவில், சூர்யா நமஸ்காரம்
எனப்படும் சூரியனுக்கு செலுத்தப்படும் 12 வணக்கமும் சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. இது முதுகு மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும் முழு உடற்பயிற்சி. இந்த பயிற்சியில் நிறைய வளைவுகள் இருப்பதால், இது உடலின் அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய வைக்கிறது.
முழுமையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு, சூரிய நமஸ்காரம் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
எடை குறைய உதவும்
சூர்யா நமஸ்காரம் ஒரு நல்ல கார்டியோ உடற்பயிற்சி. இது உடல் எடையை குறைக்க உதவும். இதில் ஏற்படும் போஸ்கள் உங்கள் வயிற்று தசைகளை ஸ்ட்ரெச் செய்து, சதைகளைக் குறைக்கும். அதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும்.
வயதாவதை தள்ளிப் போடும்
சூர்யா நமஸ்காரம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்திற்கும் முகத்திற்கும் ஒரு பிரகாசத்தைத் தரும். சுருக்கங்களைத் தடுத்து, வயதானவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. நல்ல ரிசல்ட்டுக்கு இந்த பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்
இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. வலுவான வயிற்று தசைகளைப் பெறுவதற்கும், மாதவிடாயின் வலியைக் குறைக்கவும் இது துணை புரிகிறது.
பதட்டத்தைத் தணிக்கும்
சூர்யா நமஸ்காரத்தை தவறாமல் செய்தால், உடலில் மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திலும் ஒரு வித்தியாசத்தை நம்மால் காண முடியும். ஞாபகம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் சிறந்த பயிற்சியாக இது கருதப்படுகிறது. மனதை அமைதியாக்கி, பதட்டத்திலிருந்து நம்மை விடுபடவும் உதவுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை இயல்பாக்கி, தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் நன்மை செய்கிறது.
தூக்கமினை பிரச்னையை சரி செய்கிறது
சூர்ய நமஸ்காரம் தூக்க முறைகளை மேம்படுத்துகிறது. இது மனதை அமைதிப்படுத்தி, இரவில் நல்ல அமைதியான தூக்கத்தை அளிக்கிறது.
இன்றைய வாழ்க்கை சூழலில், ஒவ்வொருவருக்கும் இந்த சூர்ய நமஸ்காரம் நன்மை பயக்கும். நடிகை கரீனா கபூர் இந்தப் பயிற்சியை வழக்கமாக செய்துக் கொண்டிருக்கிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது, இணையத்தில் வெளியாகி வைரலாவது குறிப்பிடத்தக்கது.