தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
சுரைக்காய்கால் – கிலோ
புதினா இலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவைக்கேற்ப
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்.
செய்முறை :
சுரைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் சுரைக்காய், புதினா சேர்த்து மிக்ஸியில் அரைத்து, போதுமான அளவு தண்ணீர் கலக்கவும்.
பிறகு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் கலக்கவும். இப்போது குளிர்ச்சியான சுரைக்காய் ஜூஸ் தயார்.!