ஆரோக்கியம் குறிப்புகள்அழகு குறிப்புகள்

உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைக்க வெள்ளரியை இவ்வாறு சாப்பிடுங்க!…

தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும். நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும்.

வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

கல்லீரல் மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத் தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது.

vellare

இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

கல்லீரல் பலம் பெறும். உடல் எடை குறைப்பு அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் வெள்ளரிக்காய் சிறப்பாக பணியாற்றுகிறது.

இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

சரும பளபளப்பு இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. மேலும் நீர்ச்சத்து உள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு தோல் ஆரோக்கியமாக இருக்கும்.

நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தன்மையை கொடுக்கிறது.

கருப்பை பிரச்சனைகள் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும்.

இந்த மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு அதிகம் ஏற்படுகிறது. இதனால் அப்பெண்களின் உடலில் சத்துகள் குறைந்து மிகவும் சோர்வு உண்டாகிறது.

இச்சமயங்களில் வெள்ளரிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்குகிறது.

பசிபோக்கி உணவை சாப்பிட தூண்டும் பசி உணர்வு ஆரோக்கியமான உடலுக்கு அறிகுறியாகும்.

ஆனால் சிலருக்கு அளவிற்கு அதிகமாக பசி எடுக்கும் நிலை ஏற்பட்டு அதிகம் சாப்பிட்டு உடலாரோக்கியத்தை கெடுத்து கொள்ளும் நிலை உண்டாகிறது.

இத்தகைய பிரச்சனை கொண்டவர்கள் அடிக்கடி வெள்ளரிக்காய்களை சாப்பிடுவதால் அதீத பசியுணர்வு ஏற்படாமல் உடல்நலத்தை காக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button