ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…மனமானது சோர்ந்து போயிருக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

வாழ்க்கை என்பது இன்பமும், சுவாரசியமும் கலந்தது. ஆனால் வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக இருந்து விடும் என்று சொல்வதற்கில்லை. வாழ்க்கையின் மந்தமான ஓட்டத்தில் நீங்கள் தொந்தரவுக்கு உள்ளாகலாம், ஏமாற்றமடையலாம் அல்லது ஏமாற்றப்படலாம். இந்நேரங்களில் நீங்கள் வாழ்க்கையிலுள்ள நல்ல விஷயங்களைப் பற்றியே கவனிக்க வேண்டும்.

உங்களைப் பற்றி குறைவாகவும், தோல்வி மனப்பான்மையுடனும் நினைப்பதை விட்டு விட்டு ஊக்கத்துடனும், ஆர்வத்துடனும் செயல்பட வேண்டும். உங்களைப் பற்றி குறைவாக எண்ணும் போதோ அல்லது நீங்கள் சோர்ந்து போய் இருக்கும் போதோ நீங்கள் எண்ணிப் பார்த்து முயற்சிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் பல உள்ளன.

இதுப்போன்று சுவாரஸ்யமானவை: எதிர்மறையான மனப்பான்மை உள்ளவரா நீங்க? அதை அழிக்க இதோ சில எளிய வழிகள்!!!

மோசமான விஷயங்களைப் பற்றி மேலும் நினைத்துக் கொண்டிருக்காமல், உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும் வகையில் மனதை திருப்ப வேண்டும். உங்களிடம் குறையுள்ளது என்று நீங்கள் எண்ணும் போது செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

இசையின் மகத்துவம்

இந்த உலகத்திலுள்ள எந்தவொரு விஷயத்தையும் மறக்கச் செய்து வலிகளை குறைத்து ஓய்வு மற்றும் நிவாரணங்கள் தருவதில் இசைக்கு நிகர் வேறில்லை. நீங்கள் இவ்வாறு குறைபட்டுக் கொண்டிருக்கும் வேளைகளில் அமைதியான மற்றும் மென்மையான இசையையோ அல்லது உங்கள் மனதிற்கு பிடித்த இசையையோ கேட்பது மிகச்சிறந்த நிவாரணம் தரும். இசைக்கு உங்கள் எண்ணங்களை மாற்றி, மேன்மைப்படுத்தும் குணம் உண்டு. நீங்கள் இசையை கேட்கும் போது ‘நன்றாக இருக்க’ உதவும் ஹார்மோன்கள் சுரக்கின்றன.

புத்தகம் படித்தல்

உங்களுக்கு பிடித்த ஆசிரியர் எழுதிய புத்தகத்தையோ அல்லது நாவலையோ படிக்கத் துவங்குவது உற்சாகமாக இருப்பதற்கான நல்ல வழியாகும். இவ்வாறு நீங்கள் குறைபட்டுக் கொண்டிருக்கும் போது ஊக்கப்படுத்தவும் மற்றும் ஆர்வமூட்டவும் புத்தகங்களை படியுங்கள். நேர்மறையான கருத்துக்களையும், மகிழ்ச்சியான முடிவுகளையும் கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு எண்ணங்களை மாற்றும் வலிமை உண்டு.

நடை பயணம்

உங்களைப் பற்றி குறைபட்டுக் கொண்டிருக்கும் போது, வீட்டை விட்டு வெளியேறி சற்றே காலாற நடந்து செல்லுங்கள். அருகிலுள்ள தோட்டம், பூங்கா அல்லது வேறு ஏதாவது பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக சுற்றிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும், காதலர்களையும் உங்களால் காண முடியும். வெளியே நடந்து செல்வதன் மூலமாக உங்களின் குறை காணும் மனம் கரைந்து, வாழ்க்கையின் கவலைகள் உடையத் தொடங்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சினிமா

மென்மையான ஒரு காமெடி திரைப்படத்தை காண்பதன் மூலம் கவலைகளை சற்றே தள்ளி வைக்கவும் மற்றும் உங்களை ஓய்வாக இருக்கச் செய்யவும் முடியும். இந்த விஷயத்தில் நீங்கள் சீரியஸான கருத்து சொல்லும் திரைப்படத்தை தேர்ந்தெடுத்தால், அவை உங்களை மேலும் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. நகைச்சுவை, காதல் மற்றும் அனிமேஷன் படங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து பார்க்கும் போது மனிதிலுள்ள குறைகள் எங்கே என்று தேடுவீர்கள்!

விடுமுறை

நீங்கள் மனதளவில் சோகமாகவும் மற்றும் தினசரி வாழ்க்கையில் வரும் பணிகள் மற்றும் சோதனைகளால் சோர்ந்து போயிருந்தாலும் அவற்றிற்கெல்லாம் ஒரு தடையை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒரே ஒரு நாள் இவற்றை நிறுத்துவதாலோ அல்லது விடுமுறை எடுப்பதாலோ உங்கள் மனம் ஓய்வடையுமா என்று கேட்டால், கிடைக்கும் பதில் ‘ஆம்’ என்பது தான். எனவே, நீங்கள் குறைபட்டுக் கொண்டிருக்கும் காலங்களில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவியுங்கள்.

மனம் விட்டு பேசுங்கள்

நீங்கள் மனதளவில் குறைபட்டுக் கொண்டிருக்கும் போது செய்ய வேண்டிய மிகச்சிறந்த விஷயம் – அந்த மனதை அரிக்கும் விஷயத்தைப் பற்றி மனதிலுள்ளதை வெளியில் கொட்டி விடுவது தான். உங்களிடம் நெருக்கமாக இருக்கும் ஒருவரிடம் சென்று, நீங்கள் என்ன மாதரியான சூழலில் இருக்கிறீர்கள் என்று மனம் விட்டு பேசுங்கள். இதன் மூலம் உங்களுடைய மனம் இலேசாவதையும், மகிழ்ச்சியடைவதையும் உணருவீர்கள்.

சுதந்திரமாக செயல்படுதல்

சற்றே சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் மனதை ஆறுதல் படுத்த முடியும். அதாவது உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள் – வண்டியை மனம் போன படி ஓட்டிச் செல்லவோ அல்லது ஐஸ் கிரீம் சாப்பிடவோ என எதுவாகவும் அந்த செயலாக இருக்கலாம். இதன் ஒரோ நோக்கம் உங்கள் மனதிற்குப் பிடித்த செயலால் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமே.

பார்ட்டி

ஜாலியாக பார்ட்டிகளில் கலந்து கொள்வதும், அப்படியே நடனமாடுவதும் உங்களை ரிலாக்ஸாக இருக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனமாடுவதன் மூலமாக உங்களுயை டென்ஷன் அப்படியே இறங்கி விடும்.

எழுதுங்கள்

உங்களுடைய உணர்வுகள் மற்றும் பிரச்னைகளைப் பற்றி எழுதுவது வெகுவாக ஆற்றுப்படுத்தும் என்பது உண்மை. இதன் மூலம் உங்கள் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் பல விஷயங்களை கோர்வையாக வெளியே கொண்டு வந்து தீர்வு கூட காண முடியும்.

குடும்பம்

உங்களை விரும்புபவர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நாடிச் சென்றால் குறை இருக்கும் இடம் எங்கும் இல்லை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button