27.6 C
Chennai
Tuesday, Jul 22, 2025
tfhgh
ஆரோக்கிய உணவு

இன்றே சாப்பிடுங்கள்..!! பிஸ்தாவில் உள்ள பிரம்மதமான நன்மைகள்..!!

பாதம் பருப்பை போன்று பிஸ்தா பருப்பை அனைவரும் அறிவோம். இந்த பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூலமாக உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்டுவதுடன்., உடலில் இருக்கும் பல விதமான நோய்களை குணப்படுத்தும் வல்லமையை கொண்டது. இந்த பிஸ்தா பருப்பில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் மூலமாக நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது.

பிஸ்தா பருப்பானது இரத்தத்தை சுத்திகரிக்கும் பிரதான வேலையை செய்கிறது. இதன் மூலமாக இரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து., இரத்தத்தை சுத்தப்படுத்திக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கி., உடலை பாதுகாப்புடன் வைத்து கொள்ள உதவுகிறது.

இந்த பருப்பில் இருக்கும் வைட்டமின் பி6 காரணமாக., இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து., மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நியாபக ஆற்றல் அதிகமாகிறது.
tfhgh
சூடான பாலில் தினமும் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டு வர நியாபக சக்தியானது வெகுவாக ஆத்திகரிக்கும். இதன் மூலமாக தோல் சம்பந்தப்பட்ட நோய்களானது வராமல் தடுக்கப்படுகிறது. இந்த பருப்பில் இருக்கும் வைட்டமின் ஈ மூலமாக புறஊதாக்கதிர்கள் மூலமாக தோல் நோய்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்., கண்புரை நோய்கள் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும்., கண்ணிற்கு தெளிவான பார்வையானது உண்டாகிறது. இதய சம்பந்தப்பட்ட நோய்களின் அபாயத்தை குறைத்து., மாரைடப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. மேலும்., உடலின் கேட்ட கொழுப்புகளை குறைத்து., நல்ல கொழுப்புகளின் ஆற்றலை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.

Related posts

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல்

nathan

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…தயிரை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ஆற்றலை தரும் வெஜிடபிள் ஊத்தாப்பம்

nathan

பழரசம் உடலுக்கு தீங்கானாதா?

nathan

சூப்பரான ஊத்தப்பம் செய்வதற்கு….

nathan

சுவையான பச்சை பட்டாணி தேங்காய் சாதம்

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

கட்டாயம் இதை படியுங்கள் அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

nathan